Viral Video: 'விக்ரம்' படத்துல இவ்ளோ கமல் பட Referenceஆ? குறிப்பா அந்த Climax சீன்.. நோட் பண்ணீங்களா ?

Kamal movie reference has been used in vikram movie video getting viral on social media

களத்தூர் கண்ணம்மா என்னும் திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடிக்கத் தொடங்கியவர் நம் உலக நாயகன் கமல் ஹாசன். தற்போது, நடிகர், தயாரிப்பாளர், பாடகர், எழுத்தாளர், இயக்குனர், அரசியல் என பல பரிமாணங்கள் கொண்டு பிரபலமாக விளங்கி வருகிறார்.

Kamal movie reference has been used in vikram movie video getting viral on social media

தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி என அனைத்து மொழிகளிலும் தனக்கென்ற இடத்தை நிலைநாட்டியவர். தேசிய விருது, கலைமாமணி, விஜய் விருது என பல விருதுகளை குவித்தவர். 4 வருடங்களுக்கு பிறகு, இவரது நடிப்பில் வெளியான திரைப்படம் விக்ரம்.

Kamal movie reference has been used in vikram movie video getting viral on social media

கைதி, மாஸ்டர் போன்ற திரைப்படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் ஹாசன், சூர்யா, விஜய் சேதுபதி, பகத் பாசில், ஷிவானி, காளிதாஸ் ஜெயராம் போன்ற பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தது. இப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தார்.

Kamal movie reference has been used in vikram movie video getting viral on social media

இப்படம் பெரும் வெற்றி வசூலில் ஈடுபட்டு 350 கோடிக்கும் மேல் உலகம் முழுவதும் வசூல் பெற்று வருகிறது. படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, துணை இயக்குனர்களுக்கு பைக், இயக்குனர் லோகேஷுக்கு கார், சூர்யாவிற்கு ரோலெக்ஸ் வாட்ச் என பரிசளித்த தயாரிப்பாளர் மற்றும் படத்தின் இயக்குனருமான கமல், விக்ரம் சக்சஸ் மீட்டில் அசைவ சமபந்தியில் விருந்து நடந்த வீடியோ மற்றும் புகைப்படங்கள் வைரல் ஆனது.

Kamal movie reference has been used in vikram movie video getting viral on social media

இப்படம் OTT தளத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. படம் வெளியாகி 1 மாதத்திற்கும் மேல் ஆன நிலையிலும், இப்படத்தின் vibes இன்னும் குறையவில்லை என்பதே உண்மை. விக்ரம் படம் முழுவதும் லோகேஷின் பேன் பாய் சம்பவமாக அமைந்தது குறித்து அனைவர்க்கும் தெரியும். இப்படத்தில் கைதி reference பயன்படுத்து லோகேஷ் உருவாகியிருந்தது குறித்தும் அனைவர்க்கும் தெரியும்.

Kamal movie reference has been used in vikram movie video getting viral on social media

மேலும், இந்தப் படத்தில் பழைய விக்ரம் படத்தில் இருந்து நிறைய விஷயங்களை தொடர்ச்சியாக வைத்ததோடு மட்டும் அல்லாமல் வெவ்வேறு படங்களில் இடம்பெற்ற விஷயங்களை கூட லோகேஷ் வைத்திருந்தார். அதிலும் குறிப்பாக கமலுக்கு காலில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு ராடு ஒன்று வைக்கப்பட்டு இருக்கிறது அந்த வசனத்தைக் கூட படத்திற்கு பொருந்தும் வகையில் வைத்திருந்தார் லோகேஷ்.

Kamal movie reference has been used in vikram movie video getting viral on social media

அதே போல, சூர்யா பேசும் ’27 வருஷம் ஆச்சி இந்த இடத்தை உருவாக்க, அப்பானோ பாட்டனோ தூக்கி கொடுத்துடல’ என்ற வசனமும் சூர்யாவின் 27 ஆண்டு சினிமா பயணத்தை குறிப்பது போலவே இருந்தது. இது ஒருபுறம் கமல் படத்தின் ரெபரென்சாக, சூர்யா வரும் காட்சியில் ஒருவரின் தலையை வெட்டிவிட்டு அந்த தலையை பார்த்து ஒரு ஈவிலான சிரிப்பை சிரிப்பார் சூர்யா.

Kamal movie reference has been used in vikram movie video getting viral on social media

அந்த காட்சியும் கமல் நடித்த ஆளவந்தான் படத்தில் நந்துவாக வரும் கமல், கிளைமாக்ஸில் காசை சுண்டிவிட்டு வாயில் ரத்தம் சொட்ட சொட்ட ஒரு சிரிப்பை சிரிப்பார். அதே காட்சியை தான் சூர்யாவிற்கு பயன்படுத்தி இருக்கிறார் இயக்குனர்.

Kamal movie reference has been used in vikram movie video getting viral on social media

அதே போல இந்த படத்தில் விஜய் சேதுபதியின் என்ட்ரி படு மாசாக அமைந்திருந்தது. இதுவரை விஜய் சேதுபதி வில்லனாக நடித்திருந்த படத்திலேயே இதுதான் சிறந்த என்ட்ரி என்று கூட ரசிகர்கள் பலரும் கூறி வருகின்றனர். ஆனால் இதுவும் கமல் படமான குணா படத்தில் இருந்து எடுக்கப்பட்ட விஷயம் தான்.

Kamal movie reference has been used in vikram movie video getting viral on social media

குணா திரைப்படத்தில் நாயகியை கமலஹாசன் காரில் கடத்திச் சென்று ஒரு மலையில் அடைத்து வைத்திருப்பார் அப்போது கமலுக்கு தெரியாமல் காரை எடுத்துக் கொண்டு கதாநாயகி தப்பிக்க பார்ப்பார் அந்த காட்சியில், கமல் காரில் இருந்து படுத்தபடியே பல்டி அடித்துக்கொண்டு கீழே இறங்கி நிற்பார். இதே போலத்தான் விஜய் சேதுபதியின் என்ட்ரியையும் லோகேஷ் கனகராஜ் விக்ரம் படத்தில் வடிவமைத்து வைத்திருக்கிறார். இதன் வீடியோக்கள் செம வைரல் ஆகி வருகிறது.

Share this post