'லவ் டுடே' படத்தில் தன்னை Troll செய்தது குறித்து முதன்முறையாக கௌதம் மேனன் Open Talk..!

காதல் திரைப்படங்கள் என்றாலே நமக்கு சட்டென்று நினைவுக்கு வருபவர் இயக்குனர் கவுதம் மேனன். தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு மற்றும் ஹிந்தி மொழிகளிலும் பணியாற்றியுள்ளார். மின்னலே, வாரணம் ஆயிரம் தொடர்ந்து 2010ம் ஆண்டு வெளியான விண்ணைத்தாண்டி வருவாயா திரைப்படம் இவருக்கு பெரும் அங்கீகாரத்தை பெற்றுத்தந்து இளசுகளின் பேவரைட் இயக்குனராக மாறிவிட்டார்.
வேட்டையாடு விளையாடு, பச்சைக்கிளி முத்துச்சரம், நீதானே எந்தன் பொன்வசந்தம், என்னை அறிந்தால், என்னை நோக்கி பாயும் தோட்டா போன்ற பிரபல வெற்றி திரைப்படங்களை இயக்கியுள்ளார். இவர் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான திரைப்படம் சிம்பு நடிப்பில் வெளியான வெந்து தணிந்தது காடு.
இந்நிலையில் இவரை கடந்த ஜூலை மாதம் திரையரங்குகளில் வெளியான பிரதீப் ரங்கநாதன் இயக்கி நடித்திருந்த லவ் டுடே திரைப்படத்தில் மறைமுகமாக ட்ரோல் செய்திருந்தனர். அது குறித்து, ஒரு பேட்டியில் அவர் பேசிய வீடியோ வைரலாகி வருகிறது. லவ் டுடே திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்புகளை பெற்றது.
அந்த படத்தில் நிகிதாவை இன்ஸ்டா பக்கத்தில் பின் தொடரும் பல இளைஞர்கள் மத்தியில் கௌதம் வாசுதேவ் மேனனின் கதாபாத்திரத்தில் பகடி என்ற பெயரில் தோன்றி நிகிதாவைக் கவர கவிதைகளையும், சில வரிகளையும் கூறியுருப்பர். அந்த கதாபாத்திரத்தில் கௌதம் வாசுதேவ் மேனனாக புகழ் பெற்ற யூடியூபரான குருபாய் நடித்திருந்தார்.
இந்நிலையில், சமீபத்தில் நடந்த தமிழ் இயக்குனர்கள் RoundTable பேட்டியில் பிரதீப் ரங்கநாதன் இயக்கிய லவ் டுடே படத்தின் வெற்றியைப் பாராட்டிய கவுதம் மேனன், அந்த படத்தை மற்ற முன்னணி நடிகர்கள் நடித்திருந்த படங்கள் வெளியாகும் போது தைரியமாக “லவ் டுடே” படத்தை வெளியிட்ட தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்திக்கு பாராட்டுகளை கூறினார். மேலும் லவ் டுடே படத்தில் அந்தக் காட்சியை குறிப்பிட்டு “உண்மையில் என்ன ஓட்டிருப்பாங்க.. பட குழுவினர் என்னை அழைத்திருந்தால் நானே அந்த கதாபாத்திரத்தில் நடித்திருப்பேன்” என்று கூறியிருந்தார்.
#Gvm On #Lovetoday Troll pic.twitter.com/o8N3SAAMIZ
— chettyrajubhai (@chettyrajubhai) December 28, 2022