செல்போனால் வசமாக சிக்கிய ஐஸ்வர்யா ராஜேஷ்.. பரபரப்பு காட்சிகளுடன் வெளியான ஸ்னீக் பீக்!
தெலுங்கு திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்ததன் மூலம் சினி உலகில் அடியெடுத்து வைத்தவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். பின்னர், கலைஞர் தொலைக்காட்சியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வந்த டான்ஸ் ரியாலிட்டி ஷோ ‘மானாட மயிலாட’ நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றார்.
இதனைத் தொடர்ந்து, சன் டிவியில் அசத்தப்போவது யாரு நிகழ்ச்சியில் தொகுப்பாளராக இருந்து வந்த இவர், நீதானா அவன் என்னும் தமிழ் திரைப்படத்தில் நடித்தார். இப்படம் பெரிய வரவேற்பு பெறாத நிலையில், விஜய் சேதுபதியுடன் இவர் நடித்த ரம்மி, பண்ணையாரும் பத்மினியும் திரைப்படங்கள் மூலம் நல்ல வரவேற்பை பெற்றார்.
கோலிவுட் வட்டாரத்தில் தனக்கென இடத்தை பிடித்த ஐஸ்வர்யா ராஜேஷ், பல திரைப்படங்களில் நடித்தார். இவருக்கு பெரிய மைல்கல் ஆக அமைந்த திரைப்படங்கள்: கனா மற்றும் காக்க முட்டை. தனக்கான bold கதாபாத்திரங்கள் கொண்டு ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனங்களை பெற்றார். இவர் தமிழ் மட்டுமல்லாது, தெலுங்கு மற்றும் மலையாள திரைப்படங்களிலும் நடித்து வருகிறார்.
இவர் நடிப்பில் அடுத்து வெளியாகவிருக்கும் திரைப்படம் டிரைவர் ஜமுனா. இப்படத்தின் செம த்ரில்லிங்கான ட்ரைலர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. ஒரு பெண் கார் டிரைவராக வேலை பார்த்தால் வரும் இன்னல்கள் பற்றிய படமாக உள்ளது.
இந்த படத்தை வத்திக்குச்சி படத்தை இயக்கிய இயக்குனர் கிங்க்ஸ்லின் இயக்கியுள்ளார். ஜிப்ரான் இசையமைத்துள்ளார். தமிழ், தெலுங்கு,கன்னடம், மலையாளம் என 4 மொழிகளில் வெளியாக உள்ளது. இந்நிலையில், இப்படத்தில் இருந்து இரண்டாவது ஸ்னீக் பீக் காட்சி தற்போது வெளியாகி உள்ளது.