2 நாள்'ல லவ்'க்கு ஓகே சொன்ன மஞ்சிமா.. திருமண தேதியுடன் காதல் கதை குறித்து பேசிய மஞ்சிமா - கவுதம்!
பிரபல நடிகர் கார்த்திக் அவர்களின் மகன் கவுதம் கார்த்திக், கடல் என்னும் தமிழ் திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து, என்னமோ ஏதோ, வை ராஜா வை, ரங்கூன், இவன் தந்திரன் போன்ற திரைப்படங்களில் நடித்தார். இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற அடல்ட் படம் செம ஹிட் ஆனது.
மேலும், ஹர ஹர மஹாதேவகி, இந்திரஜித், ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன், மிஸ்டர் சந்திரமௌலி ஆகிய திரைப்படத்தில் நடித்துள்ளார். தற்போது 2 படங்களில் நடித்தும் வருகிறார். அந்த வகையில், தேவராட்டம் என்னும் படத்தில் மஞ்சிமா மோகன் அவர்களுடன் ஜோடியாக நடித்தார்.
ஒரு வடக்கன் செல்பி படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமாகி தமிழ் மற்றும் மலையாளம் மொழி திரைப்படங்களில் நடித்து வருகிறார். தமிழில் அச்சம் என்பது மடமையடா, சத்ரியன், இப்படை வெல்லும், காலத்தில் சந்திப்போம், துக்ளக் தர்பார் போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார்.
இந்நிலையில் ’தேவராட்டம்’ படத்தில் நடித்த போது கெளதம், மஞ்சிமா மோகன் இருவரும் காதலிக்க ஆரம்பித்ததாகவும் இந்த காதலுக்கு இரு குடும்பத்தினரும் சம்மதித்த நிலையில் விரைவில் அதிகாரபூர்வ திருமண தேதி வெளியாகும் என செய்திகள் கடந்த சில மாதங்களாகவே வெளியாகி தீயாக பரவி வந்தது.
இருவரும் காதலித்து வருவதாக தொடர்ந்து கிசுகிசு வெளியாகி வந்த போதிலும், இரண்டு வருடங்களுக்கு மேலாக இந்த தகவலை மறுத்து வந்த மஞ்சிமா மோகன், கடந்த மாதம் தங்களது ரொமான்டிக் போட்டோஷூட் புகைப்படங்களை பதிவிட்டு தங்கள் காதலையும் விரைவில் திருமணம் செய்து கொள்ளவிருப்பத்தையும் உறுதி செய்தனர்.
இதைதொடர்ந்து, விரைவில் இவர்கள் இருவருக்கும் திருமணம் நடைபெற உள்ளதாக கூறப்பட்ட நிலையில், நவம்பர் 28ம் தேதி கெளதம் கார்த்திக் - மஞ்சிமா மோகனுக்கு திருமணம் செய்ய இரு தரப்பு பெற்றோரும் முடிவு செய்துள்ளதாகவும், இவர்களுடைய திருமணத்தில் இருவரது குடும்பத்தை சேர்ந்தவர்கள் மற்றும் நண்பர்கள் மட்டுமே கலந்து கொள்ள உள்ளதாகதாகவும் பிரஸ் மீட்டில் இந்த ஜோடி அறிவித்துள்ளது.
இந்நிலையில் திருமண அறிவிப்பை வெளியிடும் விதமாக இந்த ஜோடி செய்தியாளர்களை சந்தித்து அவர்களின் பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்தனர். அப்போது முதலில் காதலை சொன்னது யார்? என கேட்டதற்கு முதலில் காதலை சொன்னது நான் தான் என ஒப்புக்கொண்ட கெளதம், நான் கூறிய பின்னர் இரண்டு நாட்கள் கழித்து தான் மஞ்சிமா பதில் கூறியதாக தெரிவித்துள்ளார்.
ஹனிமூன் குறித்த கேள்விக்கு, இன்னும் திருமணமே ஆகவில்லை, திருமணம் ஆன பின்னர் அது குறித்து தெரிவிப்பதாக கூறியுள்ளார். திரைப்படத்தில் நடிக்கும் போதே இருவரும் காதலித்தீர்களா என கேட்டதற்கு, இல்லை படத்தில் நடிக்கும் போது, இருவரும் நண்பர்களாக தான் இருந்தோம், அதன் பின்பு தான் காதலித்ததாக கூறியுள்ளனர்.
உங்கள் காதலுக்கு பெற்றோர் ஒப்புக்கொண்டார்களா என்று கேட்டபோது? இரு வீட்டு தரப்பிலும் மிகவும் மகிழ்ச்சியாக எங்களின் காதலை ஏற்று கொண்டனர் என மஞ்சிமா மோகன் கூறினார். கௌதமின் தந்தை கார்த்தி என்ன சொன்னார் என கேட்டதற்கு, உனக்கு யார் வாழ்நாள் முழுவதும் ஊக்குவிப்பார்கள் என தோன்றுகிறதோ அவரை நீ தாராளமாக திருமணம் செய்து கொள் என தங்களின் காதலுக்கு தந்தை சம்மதம் தெரிவித்ததாக கூறினார்.
திருமணத்திற்கு பின் நடிப்பீர்களா என மஞ்சிமா மோகனிடம் கேட்டதற்கு? கண்டிப்பாக நடிப்பேன் தற்போது இரண்டு படங்கள் கைவசம் உள்ளது என தெரிவித்தார். மேலும் பத்திரிகையாளர் ஒருவர் மஞ்சிமா மோகனின் ஜாதி குறித்து கேள்வி எழுப்பியதற்கு, இது காதல் திருமணம் அதற்கு ஜாதி முக்கியம் இல்லை, இந்த கேள்வியும் தேவை இல்லை என பதில் கூறினர்.
Advance Weddings Wishes @Gautham_Karthik @mohan_manjima #GauthamKarthik #ManjimaMohan pic.twitter.com/3MR9IeXKL6
— Actor Kayal Devaraj (@kayaldevaraj) November 23, 2022
Mr . @Gautham_Karthik love proposal to Ms @mohan_manjima , after taking two days, she accepted his love... pic.twitter.com/goLb1RLiRl
— ஶ்ரீவி தேவர் ✍️ (@SriviThevar) November 24, 2022