அது வேற வாய்..இது வேற வாய்.. அப்போ ஒன்னு இப்போ ஒன்னு பேசும் ஜனனி.. வீடியோவை பகிர்ந்து விமர்சிக்கும் நெட்டிசன்கள்

janany speaking different statement from day5 to day 42 troll video getting viral on social media

விஜய் தொலைக்காட்சியில் மக்கள் ஆர்வத்துடன் எதிர்பார்த்து காத்திருக்கும் நிகழ்ச்சியில் பிக் பாஸ் ஒன்று. பரபரப்புக்கும் விறுவிறுப்புக்கும் பஞ்சமில்லாத பிக்பாஸ் (BiggBoss) நிகழ்ச்சியில்,கமல் அவர்கள் தொகுத்து வழங்க தமிழில் இதுவரை 5 சீசன் முடிந்துள்ளது.

janany speaking different statement from day5 to day 42 troll video getting viral on social media

இந்நிலையில், தற்போது ‘பிக் பாஸ் சீசன் 6’ நிகழ்ச்சி கமல் ஹாசன் தொகுத்து வழங்க தொடங்கப்பட்டுள்ளது. இது 24 நேரமாக OTT தளத்திலும், தொலைக்காட்சியில் இரவு 9 மணிக்கு 1 மணி நேர நிகழ்ச்சியாகவும் ஒளிபரப்பாகி வருகிறது.

janany speaking different statement from day5 to day 42 troll video getting viral on social media

பிக்பாஸ் சீசன் 6ல் யூடியூபர் ஜி.பி.முத்து, திருநங்கை சிவின் கணேசன், நடிகர் அசீம், நடன இயக்குனர் ராபர்ட் மாஸ்டர், நடிகை ஆயிஷா, நடிகர் மணிகண்டன் ராஜேஷ், நடிகை ரட்சிதா, கிரிக்கெட் வீரர் ராம் ராமசாமி, ராப் பாடகர் ஏ.டி.கே, இலங்கை தொகுப்பாளினி ஜனனி, செய்தி வாசிப்பாளர் விக்ரமன், மிமிக்ரி கலைஞர் அமுதவாணன், வி.ஜே. கதிரவன், மாடல் குயின்சி, மாடல் நீவா, பொது மக்களில் ஒருவர் தனலெட்சுமி, மைனா நந்தினி உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

janany speaking different statement from day5 to day 42 troll video getting viral on social media

21 போட்டியாளர்களில் இப்போது 18 போட்டியாளர் உள்ளார்கள். கானா பாடகர் அசல் கோலார், மெட்டி ஒலி சாந்தி உள்ளிட்டோர் ஏவிக்ட் ஆகிவிட்டனர். ஜிபி முத்து மீது ரசிகர்களுக்கு பெரும் எதிர்பார்ப்பு இருந்து வந்த நிலையில் அவர் குடும்ப சூழ்நிலை காரணமாக வெளியேறினார். மேலும், ஷெரினா, வி.ஜே.மகேஸ்வரி, நிவாஷினி எவிக்ட் ஆகி வெளியேறினர்.

janany speaking different statement from day5 to day 42 troll video getting viral on social media

இந்த சீசனில் நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன்பே ஆர்மி பெற்றவர் இலங்கையை சேர்ந்த தொகுப்பாளர் ஜனனி. நிகழ்ச்சியில் ஜனனி பேசும் கொஞ்சும் தமிழும், கியூட்டான எக்ஸ்பிரஸனும் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி இருக்கிறது. இதனால் இந்த சீசன் லாஸ்லியா இவர் தான் என்று பலரும் கூறி வந்தனர்.

janany speaking different statement from day5 to day 42 troll video getting viral on social media

ஆனால் கடந்த சில வாரங்களாக இவர் அமுதவாணனின் கை பாகையாக இருந்து வருவது இவரது ரசிகர்களை பெரும் ஏமாற்றத்திற்கு தள்ளி இருக்கிறது. ஆரம்பம் முதலே இவர் அமுதவாணன் என்ன சொல்கிறாரோ அதைத்தான் செய்து வருகிறார். அதேபோல் இவருக்கு எந்த பிரச்சினை ஏற்பட்டாலும் அமுதவாணன் வான்டட் ஆக ஆஜராகிவிடுகிறார்.

janany speaking different statement from day5 to day 42 troll video getting viral on social media

இதனால் வீட்டில் உள்ள பிற போட்டியாளர்களும் இது குறித்து கமலிடம் கூறி இருந்தார்கள். மேலும், சாதுவாக இருந்த ஜனனி,குயின்சியின் துண்டு விவகாரத்தில் கையில் இருந்த டீ கப்பை உடைத்து கதறி அழுது இருந்தார். இந்த விஷயத்தை கமல் கூட கண்டித்து இருந்தார். இந்த நிலையில் நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் ஜனனி பேசியதற்கும் தற்போது ஜனனி பேசியிருக்கும் வீடியோவை சோசியல் மீடியாவில் நெட்டிசன்கள் வைரல் ஆகி வருகிறார்கள்.

janany speaking different statement from day5 to day 42 troll video getting viral on social media

அதாவது, இந்த நிகழ்ச்சி தொடங்கிய ஐந்தாவது நாளில் தனலட்சுமி- ஜிபி முத்து இடையே சர்ச்சை எழுந்த போது ரீல்ஸ் வீடியோ குறித்து தனம் பேசி இருந்தார். அதற்கு கோவம் அடைந்த ஜனனி, பிக் பாஸ் வீட்டில் உள்ள இருப்பவர்கள் எல்லோரும் அக்கா, தங்கை, அண்ணன் போன்ற உறவுகள் உடன் ஒரு குடும்பத்தோடு தான் இருக்க வேண்டும். இது ஒன்னும் ரீல்ஸ் கிடையாது என்று ஜனனி பேசியிருந்தார்.

janany speaking different statement from day5 to day 42 troll video getting viral on social media

இதே 42வது நாளில் அமுதவாணனிடம், இங்கு எல்லோருமே போட்டியாளர்கள் தான். இது ஒன்றும் வீடு கிடையாது. விளையாட தான் வந்திருக்கோம். அவர் அவர்கள் விளையாட்டை அவர்கள் தான் விளையாட வேண்டும் என்று ஜனனி பேசி இருக்கிறார். இப்படி மாறி மாறி ஜனனி பேசியிருக்கும் வீடியோவை ரசிகர்கள் பயங்கரமாக விமர்சித்து வருகிறார்கள்.

Share this post