சிம்பிளாக தயாரிக்கப்பட்ட கௌதம் கார்த்திக் - மஞ்சிமா திருமண பத்திரிக்கை.. அதுல இப்டி ஒரு ஸ்பெஷலா?

பிரபல நடிகர் கார்த்திக் அவர்களின் மகன் கவுதம் கார்த்திக், கடல் என்னும் தமிழ் திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து, என்னமோ ஏதோ, வை ராஜா வை, ரங்கூன், இவன் தந்திரன் போன்ற திரைப்படங்களில் நடித்தார். இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற அடல்ட் படம் செம ஹிட் ஆனது.
மேலும், ஹர ஹர மஹாதேவகி, இந்திரஜித், ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன், மிஸ்டர் சந்திரமௌலி ஆகிய திரைப்படத்தில் நடித்துள்ளார். தற்போது 2 படங்களில் நடித்தும் வருகிறார். அந்த வகையில், தேவராட்டம் என்னும் படத்தில் மஞ்சிமா மோகன் அவர்களுடன் ஜோடியாக நடித்தார்.
ஒரு வடக்கன் செல்பி படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமாகி தமிழ் மற்றும் மலையாளம் மொழி திரைப்படங்களில் நடித்து வருகிறார். தமிழில் அச்சம் என்பது மடமையடா, சத்ரியன், இப்படை வெல்லும், காலத்தில் சந்திப்போம், துக்ளக் தர்பார் போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார்.
இந்நிலையில் ’தேவராட்டம்’ படத்தில் நடித்த போது கெளதம், மஞ்சிமா மோகன் இருவரும் காதலிக்க ஆரம்பித்ததாகவும் இந்த காதலுக்கு இரு குடும்பத்தினரும் சம்மதித்த நிலையில் விரைவில் அதிகாரபூர்வ திருமண தேதி வெளியாகும் என செய்திகள் கடந்த சில மாதங்களாகவே வெளியாகி தீயாக பரவி வந்தது.
இருவரும் காதலித்து வருவதாக தொடர்ந்து கிசுகிசு வெளியாகி வந்த போதிலும், இரண்டு வருடங்களுக்கு மேலாக இந்த தகவலை மறுத்து வந்த மஞ்சிமா மோகன், கடந்த மாதம் தங்களது ரொமான்டிக் போட்டோஷூட் புகைப்படங்களை பதிவிட்டு தங்கள் காதலையும் விரைவில் திருமணம் செய்து கொள்ளவிருப்பத்தையும் உறுதி செய்தனர்.
இதைதொடர்ந்து, விரைவில் இவர்கள் இருவருக்கும் திருமணம் நடைபெற உள்ளதாக கூறப்பட்ட நிலையில், இவர்களுடைய திருமண தேதி குறித்த சில தகவல்கள் சமூக வலைத்தளத்தில் கசிந்துள்ளது. அதாவது இந்த மாதம் நவம்பர் 28ம் தேதி கெளதம் கார்த்திக் - மஞ்சிமா மோகனுக்கு திருமணம் செய்ய இரு தரப்பு பெற்றோரும் முடிவு செய்துள்ளதாகவும், இவர்களுடைய திருமணத்தில் இருவரது குடும்பத்தை சேர்ந்தவர்கள் மற்றும் நண்பர்கள் மட்டுமே கலந்து கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது.
இதை தொடர்ந்து, திருமண வரவேற்பு நிகழ்ச்சியை பிரமாண்டமாக நடத்த திட்டமிட்டுள்ளதாகவும், இதில் திரையுலகை சேர்ந்த முன்னணி பிரபலங்கள் பலர் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தகவல் குறித்து கெளதம் கார்த்திக் மற்றும் மஞ்சிமா மோகன் தரப்பில் விரைவில் அறிவிப்பு வெளியாகும் என கூறப்படுகிறது.
இந்நிலையில் மஞ்சிமா மோகன் - கௌதம் கார்த்தியின் திருமண பத்திரிக்கையின் புகைப்படம் சமூக வலைதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. சாதாரண பத்திரிக்கை போல் இல்லாமல், இதில் சற்று வித்தியாசத்தையும் காட்டி அனைவரது பாராட்டுகளையும் குவித்துள்ளது இந்த பிரபல ஜோடி. அதாவது இந்த பத்திரிக்கை கையால் நெசவு செய்யப்பட்ட துணியால் செய்யப்பட்டுள்ளது என கூறப்படுகிறது. இந்த தகவல் வெளியே வர பலரும் தங்களுடைய பாராட்டுகளை தெரிவித்து வருகிறார்கள்.