தமன்னாவிற்கு திருமணம்? மாப்பிளை இவர் தானா? வாழ்த்து மழை பொழியும் ரசிகர்கள்

tamanna to get married soon and groom information getting viral on social media

கேடி திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் வில்லி கதாபாத்திரத்தில் தோன்றி அறிமுகமானவர் நடிகை தமன்னா. இதனைத் தொடர்ந்து, வியாபாரி மற்றும் கல்லூரி போன்ற திரைப்படங்களில் நடித்தார். கல்லூரி திரைப்படத்தில் தனது எதார்த்தமான நடிப்பு, மேக் அப் இன்றி சாதாரண கல்லூரி மாணவியாக வாழ்ந்திருப்பார்.

tamanna to get married soon and groom information getting viral on social media

அதனைத் தொடர்ந்து, படிக்காதவன், அயன், அனந்த தாண்டவம், கண்டேன் காதலை, ஆக்ஷன், வீரம், சுறா போன்ற பல திரைப்படங்களில் நடித்தார். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம், ஹிந்தி போன்ற பல மொழி களிலும் நடித்த இவருக்கு, ரசிகர் பட்டாளம் ஏராளம். தமிழ் மொழியில் விஜய், அஜித், சூர்யா, சிம்பு,கார்த்தி, ஜெயம் ரவி என முன்னணி கதாநாயகர்களுடன் நடித்துள்ளார்.

tamanna to get married soon and groom information getting viral on social media

நிறைய வெற்றி திரைப்படங்களில் நடித்த இவர், நவம்பர் ஸ்டோரி போன்ற படங்களில் நடித்தார். திரைப்படங்கள், வெப் சீரீஸ், மியூசிக் ஆல்பங்கள் என கவனம் செலுத்தி வரும் தமன்னா, இடைவிடாது தனது கவர்ச்சி புகைப்படங்களையும் இணையத்தளத்தில் பதிவிட்டு அதனை ட்ரெண்ட் செய்து வருகிறார். வெப்சீரிஸ் இல் நடித்து வரும் நடிகை தமன்னா மறுபக்கம் ஹிந்தி படங்களிலும் நடித்து வருகிறார்.

tamanna to get married soon and groom information getting viral on social media

சமீபத்தில், இவர் நடிப்பில் 11th hour வெப் சீரீஸ் வெளியானது. நெல்சன் திலிப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் ஜெயிலர் படத்தில் தமன்னா கமிட்டாகியுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், நடிகை தமன்னாவின் திருமணம் குறித்து பல தகவல்கள் வெளியாகி வருகிறது.

தமன்னா அடுத்து பெரிய படங்கள் எதிலும் கமிட் ஆகாமல் இருப்பதன் காரணம் திருமணம் தான் என கூறப்படுகிறது. தற்போது தமன்னா மும்பையை சேர்ந்த இளம் தொழிலதிபர் ஒருவரை திருமணம் செய்து கொள்ள, ஒப்புக்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. விரைவில் இந்த தகவலை தமன்னா வெளிப்படையாக அறிவிப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது இந்த தகவல் வெளியானதை தொடர்ந்து ரசிகர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

Share this post