தனக்கு விக்னேஷ் சிவன் முன் 'Love You' சொன்ன ரசிகரை தேடிய நயன்.. வைரல் வீடியோ

கேரளா மாநிலத்தை சேர்ந்த நயன்தாரா, 2004ம் ஆண்டு ஹரி இயக்கத்தில் வெளியான ஐயா படம் மூலம் தமிழ் திரையுலகில் ஹீரோயினாக அறிமுகமானார். கடந்த சுமார் 20 ஆண்டுகளில், தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற அனைத்து தென்னிந்திய மொழி படங்களில் நடித்து தென்னிந்திய திரையுலகின் லேடி சூப்பர்ஸ்டாராக வலம் வருகிறார்.
நயன்தாரா நடிப்பில் கனெக்ட் திரைப்படம் கிறிஸ்துமஸ் தினத்தை முன்னிட்டு டிசம்பர் 22ம் தேதி வெளியாக உள்ளது. விக்னேஷ் சிவனின் ரவுடி பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் மாயா, கேம் ஓவர் போன்ற திரில்லர் படங்களை இயக்கிய அஸ்வின் சரவணன் இயக்கத்தில் நயன்தாரா, வினய், சத்யராஜ், பாலிவுட் நடிகர் அனுபம் கேர் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் கனெக்ட்.
படத்தின் டீசர், ட்ரைலர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. ஹாரர் ஜர்னரில் எடுக்கப்பட்டுள்ள இந்த படம், 95 நிமிடங்கள் இடைவெளி இல்லாமல் ஓடும் படமாக எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு அமானுஷ்ய சக்தியிடம் மாட்டிக்கொள்ள அவரை அதில் இருந்து எப்படி மீட்கிறார் நயன்தாரா என்பதை பரபரப்பான காட்சிகளுடன் காட்டியுள்ளார் இயக்குனர்.
இந்த படத்தின் சிறப்பு காட்சி நேற்று பத்திரிகையாளர்களுக்காக திரையிடப்பட்டது. இந்தக் காட்சியை பார்ப்பதற்காக நயன்தாரா தனது கணவர் விக்னேஷ் சிவனுடன் திரையரங்கிற்கு வருகை தந்த போது சிறப்பான வரவேற்பு கொடுக்கப்பட்டது.
நயன்தாரா தன்னை பார்க்க வந்த ரசிகர்களுக்கு ஹாய் சொன்னார். அதனிடையே, ஒரு ரசிகர் திடீரென விக்னேஷ் சிவன் முன் ‘லவ் யூ’ என்று சொன்னதை அடுத்து நயன்தாரா சிரித்துக் கொண்டே தனக்கு லவ் யூ சொன்ன நபரை தேடிய வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது.