டபுள் மீனிங்கில் மோசமாக மெசேஜ் அனுப்பிய நெட்டிசன்.. செருப்பு சைஸ் சொல்லி பதிலடி கொடுத்த குஷ்பு
தமிழ் சினிமாவில் 80ஸ் 90ஸ் களில் கனவு கன்னியாக வலம் வந்த நடிகை குஷ்பூ. இவருக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளமே இருந்தது. குஷ்புவிற்கு கோவில் கட்டும் அளவிற்கு வெறித்தனமான ரசிகர்கள் இருந்தனர். சற்று பப்ளியாக இருந்த குஷ்பூ, ஸ்லிம் பிட்டான நடிகைகள் மட்டுமே சாதிக்க முடியும் என்ற எண்ணத்தை மாற்றியவர்.
இப்படி பிரபல நடிகையாக வலம் வந்த குஷ்பு இயக்குனர் சுந்தர் சி யை திருமணம் செய்து கொண்டு செட்டிலானார். திருமணத்திற்கு பின்பு குணச்சித்திர வேடங்களில் நடித்து வந்த குஷ்பு, சமீபகாலமாக கடின உடற்பயிற்சி செய்து உடல் எடையை குறைத்து அந்த புகைப்படங்களை சோசியல் மீடியாவில் பதிவிட்டிருந்தார்.
இதனை கண்ட ரசிகர்கள் முதல் படத்தில் பார்த்த மாதிரி இருக்கீங்க, இப்போ கூட ஹீரோயினா நடிக்கலாம் என கமெண்ட் செய்து வந்தனர். அவரிடம் எப்படி உடல் எடையை குறைத்தீர்கள் என்றெல்லாம் தொடர்ந்து கேட்டு வந்தனர்.
இதற்கு பதிலளித்த குஷ்பு, தான் தினமும் வாக்கிங் சென்றதாகவும், அதன் மூலமே உடல் எடையை குறைத்ததாகவும் கூறினார். உடல் எடையை குறைத்த பின்னர் நடிகை குஷ்பு, விதவிதமான ஆடைகளில் புகைப்படங்கள் எடுத்து அதனை தனது சமூக வலைதளப்பக்கங்களில் பதிவிடுவதை வழக்கமாக வைத்துள்ளார்.
அவ்வாறு அவர் பதிவிடும் புகைப்படங்களை பார்க்கும் நெட்டிசன்கள் தினந்தோறும் உங்களின் வயது குறைந்துகொண்டே செல்வதாக கமெண்ட் செய்து வருகின்றனர். ஏராளமான பாசிடிவ் விமர்சனங்கள் வந்தாலும், ஒரு சில நெகடிவ் விமர்சனங்களும் வந்துகொண்டுதான் இருக்கின்றன. அதற்கு குஷ்புவும் பதிலடி கொடுத்து வருகிறார்.
இந்நிலையில், நடிகை குஷ்பு கடந்த சில நாட்களுக்கு முன் தனது சகோதரர் உயிருக்கு போராடி வருவதாகவும் அவருக்காக பிரார்த்தனை செய்யவும் என்றும் தெரிவித்திருந்தார். ஆனால் அதற்கு இரண்டு நாள் கழித்து தனது சகோதரர் சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்து விட்டதாகவும் அவரது ஆத்மா சாந்தியடைய பிரார்த்தனை செய்யுங்கள் என்றும் கேட்டுக் கொண்டிருந்தார்.
இந்த பதிவுக்கு நெட்டிசன் ஒருவர் கிண்டலாக கமெண்ட் செய்திருந்தார். ’அக்காவுக்கு சின்னத்தம்பி ஞாபகம் வந்துருச்சு’ என கிண்டலாக கூறியதை அடுத்து குஷ்பு அதை பார்த்து ஆவேசமடைந்து, ‘என்னுடைய செருப்பு சைஸ் 41. தைரியமிருந்தால் நேரில் வா. இதுதான் உங்க கீழ்த்தரமான புத்தி, நீங்கள் எல்லாம் மாறவே மாட்டீங்களாடா! நீ எல்லாம் கலைஞர் பாலோயர்ன்னு சொல்லிக்க வெட்கப்படனும்’ என்று சரமாரியாக பதிவு செய்துள்ளார். குஷ்புவின் இந்த ஆவேசத்தை பார்த்த அந்த நபர் தனது கமெண்ட்டை டெலிட் செய்து விட்டதாக தெரிகிறது.