நைட் பார்ட்டி - போதையில் நடிகர் விஜய்? வெளியான புகைப்படங்கள்
பிரபல இயக்குனர் சந்திரசேகரின் மகன் நமது தற்போதைய தளபதி நடிகர் விஜய். தனது தந்தை இயக்கத்தின் மூலம் திரையுலகில் அடியெடுத்து வைத்த இவர், தற்போது ஆல் இந்தியா லெவெலுக்கு பேமஸ். எட்டிப்பிடிக்க இயலாத அளவிற்கு உச்சத்தில் உள்ள விஜய், 90 களின் பிற்பாதியில் வெளியான படங்கள் பெரும் ரசிகர் பட்டாளத்தை உருவாக்கினார்.
பொங்கல் பண்டிகையையொட்டி இவர் நடிப்பில் வாரிசு திரைப்படம் வெளியாகவுள்ளது. என்னதான், திரையுலகை பொறுத்தவரை விஜயை கொண்டாடி வந்தாலும், விஜய் அவர்களின் சொந்த வாழ்க்கை குறித்து நெகட்டிவ் விமர்சனங்களும் கருத்துக்களும் ஏராளமாக உலாவி வருகிறது.
அவருக்கும் அவரின் பெற்றோருக்கும் உள்ள கருத்து வேறுபாடு குறித்து அதிகம் பேசப்பட்டு வந்தது. அவருக்கும் அவரது மனைவிக்கும் விவாகரத்து ஆகவிருப்பதாக தகவல்கள் வேகமாக பரவி வருகிறது.
இந்நிலையில், அவர் பார்ட்டியில் தலைக்கேறிய போதையில் இருந்ததாக சில புகைப்படங்கள் வெளியாகி உள்ளது. தனக்கு நெருங்கிய நண்பர்களின் பார்ட்டி என்றால் மட்டுமே கண்டிப்பாக கலந்துகொள்வார் விஜய். அந்த வகையில், பிரபல நடிகர் பிரேம்ஜியின் பிறந்தநாள் இரவு பார்ட்டி ஒன்றில் விஜய் கலந்துகொண்டார். இந்த பார்ட்டியில் நடிகர் விஜய் சரக்கு அடித்ததாக கூறப்பட்டது.
அதுமட்டுமின்றி மது அருந்திய பிறகு போதையில் மற்ற நடிகர்களுடன் அவர் எடுத்துக்கொண்டதாக சில புகைப்படங்கள் வெளிவந்தது. போட்டோக்களை பார்த்தவுடன் விஜய் மது அருந்தியதை உறுதியாகவே கூறினார்கள். ஆனால், இந்த செய்தி எந்த அளவிற்கு உண்மையானது என்று தெரியவில்லை. இந்த செய்தி வெளிவந்த நேரத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.