மோசமாக கமெண்ட் செய்த ரசிகர்.. சமந்தா நச் பதில் ! Viral Tweet
தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் டாப் ஹீரோயின்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகை சமந்தா. கவுதம் மேனனின் Ye Maaya Chesave என்னும் தெலுங்கு திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகி, நீதானே எந்தன் பொன்வசந்தம், நான் ஈ, கத்தி, தெறி, அஞ்சான், 24, மெர்சல் உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலம் அடைந்தார்.
தமிழ் மற்றும் தெலுங்கு மொழி திரைப்படங்களில் முன்னணி தெலுங்கு நடிகர்களுடனும் நடித்து வரும் இவர், பிரபல நடிகையாக வலம் வருகிறார். தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக திகழ்ந்து வந்த சமந்தா, நடிகர் நாக சைதன்யாவை காதலித்து 2017ல் திருமணம் செய்து கொண்டார். ஒருக்கட்டத்தில் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து செய்து நாக சைதன்யாவை பிரிந்து வாழ்ந்து வந்தார்.
மையோசிட்டிஸ் என்ற பிரச்சனையால் அவதிப்பட்டு வரும் சமந்தா, தற்போது அதற்கு சிகிச்சை மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில், சமந்தாவிற்கு ஆயுர்வேத சிகிச்சை கொடுக்கப்பட்டு வருவதாக கூறப்பட்ட நிலையில், இதை தொடர்ந்து சமாந்த மேல் சிகிச்சைக்காக விரைவில் வெளிநாடு செல்ல உள்ளாதாக சொல்லப்பட்டது.
அவரது உடல்நிலை தற்போது தேறி வருவதாக கூறப்பட்டாலும், அவர் புதிய படங்களில் நடிக்க ஒப்புக் கொள்ளவில்லை என்றும் ஏற்கனவே ஒப்பந்தித்த படங்களை மட்டும் முடித்து விட்டு சினிமாவுக்கு ஒரு நீண்ட இடைவெளி விட திட்டமிட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், கடந்த வாரம் ராங்கி, டிரைவர் ஜமுனா, செம்பி, கனெக்ட், ஓ மை கோஸ்ட் என பெண் கதாபாத்திரங்களுக்கு முன்னிலைப்படுத்தும் திரைப்படங்கள் வெளியாகின. இந்த திரைப்படங்கள் நல்ல வரவேற்பையும் பெற்று வருகின்றன.
இந்த படங்களின் பேனர்களை ஒன்றாக ஒரு தியேட்டரில் இருக்கவே அதனை புகைப்படம் எடுத்து சமூக வலைதளங்களில் பதிவேற்றி தமிழ் சினிமா ’பிரம்மிக்கத்தக்க முன்னேற்றப் பாதையில் பயணித்து வருகிறது. பத்து வருடங்களுக்கு முன்னால் இதெல்லாம் நினைத்துப் பார்க்கவே முடியாத அளவுக்கு இருந்தது’ எனப் பகிர்ந்திருக்கிறார் நெட்டிசன் ஒருவர்.
இதைப் பகிர்ந்த நடிகை சமந்தா ‘வுமன் ரைசிங்’ என குறிப்பிட்டுள்ளார். இதற்கு ஒருவர் ‘ஆமாம்! பெண்கள் எழுவது விழுவதற்காகதான்’ என நெகட்டிவாக கமெண்ட் செய்ய, அவருக்கு நடிகை சமந்தா பதிலடி தந்திருந்தார். அந்த பதிலில், ’விழுந்து மீண்டும் எழுவது, இன்னும் வலிமையாக்கும் என் இனிய நண்பரே’ என சமந்தா பதிலடி கொடுத்துள்ளார்.
நடிகை சமந்தா, தேவ் மோகன் நடித்திருக்கக்கூடிய ‘சாகுந்தலம்’ திரைப்படம் பிப்ரவரி 17ம் தேதி திரையரங்குகளில் 3டியில் உலகம் முழுவதும் வெளியாக இருக்கிறது. இதற்காக சமந்தாவுக்கு வாழ்த்து தெரிவித்து அவர் உடல் நலன் விரைவில் குணமடைய வேண்டும் எனவும், ரசிகர்கள் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
🫶🏻🫶🏻🫶🏻🫶🏻
— Samantha (@Samanthaprabhu2) January 2, 2023
Women Rising!! https://t.co/qR3N3OozK8
Getting back up makes it all the more sweeter my friend . https://t.co/UgdW7GC8EZ
— Samantha (@Samanthaprabhu2) January 2, 2023