தளபதியின் 'பீஸ்ட்' படத்தின் அப்பட்டமா காப்பி தான் 'துணிவு' ட்ரைலர்? தீயாய் பரவும் மீம்ஸ்!
தயாரிப்பாளர் போனி கபூர், இயக்குனர் எச்.வினோத் மற்றும் அஜித் கூட்டணியில் 3வது படமாக உருவாகியுள்ள திரைப்படம் ‘துணிவு’. ஏற்கனவே இவர்கள் மூவர் கூட்டணியில் ‘நேர்கொண்ட பார்வை’ மற்றும் ‘வலிமை’ ஆகிய இரண்டு படங்கள் நல்ல விமர்சனம் மற்றும் வசூல் பெற்ற நிலையில், துணிவு படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு உள்ளது.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, தளபதி விஜய்யின் ‘வாரிசு’ படமும், அஜித்தின் ‘துணிவு’ படமும் வெளியாக உள்ளதால், இந்த இரு படங்களின் புரோமோஷன் பணிகளும் படுவேகமாக நடந்து வருகிறது. இந்நிலையில், ‘துணிவு’ படத்தின், முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள நடிகர்களின் கேரக்டர் லுக் மற்றும் அவர்களின் கதாபாத்திரத்தின் பெயர் ஆகியவை வெளியிடப்பட்டது.
இதைத் தொடர்ந்து, ‘துணிவு’ படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், நெட்டிசன்கள் சிலர் விஜய் நடிப்பில் வெளியான ‘பீஸ்ட்’ படத்துடன் ‘துணிவு’ பட ட்ரைலரை ஒப்பிட்டு மீம்ஸ் போட்டு தெறிக்க விட்டு வருகின்றனர்.
‘பீஸ்ட்’ படத்தில் மால் ஹைஜாக் செய்யப்படுவதாகவும்… ‘துணிவு’ படத்தில் பேங்க் செய்யப்படுவதாகவும், அதில் இருக்கும் கதாபாத்திரங்கள் போன்றே இந்த படத்திலும் கதாபாத்திரங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும் கூறி வருகின்றனர். மேலும் இது குறித்த புகைப்படங்கள் சிலவும் சமூக வலைதளத்தில் வைரலாகி விமர்சனங்களுக்கு ஆளாகி வருகிறது.