Viral Video: சங்கீதாவை விவாகரத்து செய்கிறாரா விஜய்? அதிகாரப்பூர்வ அறிவிப்பா.. இணையத்தில் பரவும் செய்திகள்..

பிரபல இயக்குனர் சந்திரசேகரின் மகன் நமது தற்போதைய தளபதி நடிகர் விஜய். தனது தந்தை இயக்கத்தின் மூலம் திரையுலகில் அடியெடுத்து வைத்த இவர், தற்போது ஆல் இந்தியா லெவெலுக்கு பேமஸ். எட்டிப்பிடிக்க இயலாத அளவிற்கு உச்சத்தில் உள்ள விஜய், 90 களின் பிற்பாதியில் வெளியான படங்கள் பெரும் ரசிகர் பட்டாளத்தை உருவாக்கினார்.
பொங்கல் பண்டிகையையொட்டி இவர் நடிப்பில் வாரிசு திரைப்படம் வெளியாகவுள்ளது. என்னதான், திரையுலகை பொறுத்தவரை விஜயை கொண்டாடி வந்தாலும், விஜய் அவர்களின் சொந்த வாழ்க்கை குறித்து நெகட்டிவ் விமர்சனங்களும் கருத்துக்களும் ஏராளமாக உலாவி வருகிறது. அவருக்கும் அவரின் பெற்றோருக்கும் உள்ள கருத்து வேறுபாடு குறித்து அதிகம் பேசப்பட்டு வந்தது.
இந்நிலையில், அவருக்கும் அவரது மனைவிக்கும் விவாகரத்து ஆகவிருப்பதாக தகவல்கள் வேகமாக பரவி வருகிறது. நடிகர் விஜய் எந்த திரைப்பட விழா என்றாலும் தனது மனைவியை அழைத்து வருவார். நிறைய ஆடியோ வெளியீட்டு விழாக்களில் பங்குபெற்றுள்ளார். அதேபோல் பிரபலங்களின் திருமணமோ அல்லது ரசிகர்களின் திருமணமோ எதுவாக இருந்தாலும் தனது மனைவியுடன் தான் வருவார்.
ஆனால் அட்லீ-பிரியா சீமந்த நிகழ்ச்சிக்கும் சரி, வாரிசு ஆடியோ வெளியீட்டிலும் சரி தனது மனைவியை அழைத்து வரவில்லை. இதனால் அவர்களுக்குள் பிரச்சனை ஏற்பட்டு பிரிய இருக்கிறார்களோ என பேச்சு அடிபடுகிறது. இது குறித்து, பிரபல விமர்சகர் ஒருவர் பேசியிருப்பதும் பேச்சு பொருளாக மாறியுள்ளது.
விஜய்யை ஒதுக்கி வைத்து தனியாக வாழும் சங்கீதா. விஜய் - சங்கீதா விரைவில் அதிகாரபூர்வ விவாகரத்து?#Vijay #Varisu #Thunivu pic.twitter.com/GdVcOq4wim
— மிஸ்டர்.உத்தமன் (@MrUthaman) December 30, 2022