எல்லை மீறிப்போகுது உங்க கிளாமர்.. உச்சகட்ட கவர்ச்சியால் திக்குமுக்காட வைக்கும் தர்ஷா குப்தா

தனது சிறு வயது முதலே மாடலிங் போட்டிகளில் கலந்து கொண்டு விளம்பர படங்களில் நடித்து வந்தவர் நடிகை தர்ஷா குப்தா. கர்நாடக மாநிலம் பெங்களூருவை சேர்ந்த இவர், தற்போது கோயம்பத்தூரில் வசித்து வருகிறார்.
மாடலிங் செய்யும் போதே நடிப்பின் மீது கொண்ட ஆர்வத்தினால், ‘முள்ளும் மலரும்’ என்னும் தொடர் மூலம் நடிக்கத் தொடங்கினார். அதனைத் தொடர்ந்து, தற்போது, மக்கள் ஆதரவை கொண்டு பிரபலமாக ஒளிபரப்பாகி வந்த, சன் டிவியில் ‘மின்னலே’ தொடரிலும், விஜய் டிவியில் ‘செந்தூரப்பூவே’ சீரியலிலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலம், புகழ் உடன் கொண்ட சேட்டைகள் மூலம் சோசியல் மீடியா பேமஸ் ஆகி இளசுகள் மனதில் இடம் பிடித்தார். மேலும், நடிப்புத் திறமை மற்றும் கவர்ச்சி உடல்வாகு தோற்றம் கொண்ட தர்ஷா குப்தா, ரிச்சர்ட் ஹீரோவாக நடித்து வெளியான ‘ருத்ர தாண்டவம்’ படத்தில் கதாநாயகியாக நடித்ததன் மூலம் சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரையிலும் காலடி வைத்துள்ளார்.
மேலும் இவர், சமீபத்தில் வெளியான “ஓ மை கோஸ்ட்” படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் இவர், தனது ஹாட் புகைப்படங்களை பதிவிடுவதை வாடிக்கையாக வைத்துள்ளார். இந்நிலையில், ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு கவர்ச்சி புகைப்படங்களை பதிவிட்டு தனது வாழ்த்தை ரசிகர்களுக்கு தெரிவித்துள்ளார்.