என்ன பாரதி கண்ணம்மா சீசன் 2 ரெடியா? கண்ணம்மா பதிவால் அதிர்ந்த ரசிகர்கள்.

does this mean barathi kannamma 2 script is ready vinusha photo getting viral on social media

விஜய் தொலைக்காட்சியில் நிறைய சீரியல்கள் மத்த சேனல்களை பின் தள்ளி டிஆர்பி ரேஸில் முதல் 5 இடங்களில் பிடித்து வருவது வழக்கம். அப்படி பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் சீரியலில் பாரதி கண்ணம்மா தொடர் டாப் இடத்தில் இருந்து வந்தது. இல்லத்தரசிகள் பேவரைட் ஆக மாறிய இத்தொடர், ரசிகர்களை மிகவும் கவர்ந்தது.

does this mean barathi kannamma 2 script is ready vinusha photo getting viral on social media

டிஆர்பியில் டாப் இடத்தை பிடித்து வரும் சீரியல் தொடர் பாரதி கண்ணம்மா. இதில் தொடரில் கதாநாயகனாக நடித்து வருபவர் அருண் பிரசாத்திற்கு கடந்த வருடம் சிறந்த கதாநாயகன் விருது கிடைத்தது. இத்தொடரில் முதலில் கண்ணம்மாவாக நடித்த ரோஷினி ஹரிப்ரியன், சில பல கமிட்மென்ட் காரணமாக இத்தொடரை விட்டு வெளியேறிவிட்டார். அவருக்கு பதிலாக, வினுஷா ரோஷினி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

does this mean barathi kannamma 2 script is ready vinusha photo getting viral on social media

பாரதி கண்ணம்மா சீரியல் தற்போது 900 எபிசோடுகளை கடந்து ஓடிக்கொண்டிருக்கிறது. பரபரப்பாக ஓடி டிஆர்பியில் முன்னணியில் இருந்து வந்த இந்த தொடர், தற்போது மோசமான விமர்சனங்களை அதிகம் பெற்று வருகிறது. ஒரே கதையை சஸ்பென்ஸ் என்ற பெயரில் ஜவ்வு போல இழுத்து வருவதாக ரசிகர்கள் தங்கள் கருத்துக்களை கூறி வருகின்றனர்.

does this mean barathi kannamma 2 script is ready vinusha photo getting viral on social media

இந்த சீரியலை எப்போ தான் முடிப்பீங்க என நெட்டிசன்களே தினமும் கேட்கும் அளவுக்கு சீரியல் சென்றுகொண்டிருக்கிறது. சீரியலில் ஹேமா வேடத்தில் நடித்து வரும் லிசா சீரியல் இயக்குனர் அகிலன் அஞ்சலி உளிட்டோருடன் இணைந்து வெளியிட்டுள்ள ரீல்ஸ் வீடியோவில் மக்கள் சீரியலை எப்படா முடிப்பீங்க என கேட்கிறாங்க ஆனால் எங்களுக்கு எண்டே கிடையாது என கூறுவது போல தெரிவித்திருந்தனர்.

does this mean barathi kannamma 2 script is ready vinusha photo getting viral on social media

தற்போது, ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்திருந்த பாரதியின் டிஎன்ஏ ரிசல்ட் வந்துவிடவே, பாரதி உண்மையை தெரிந்து கொள்கிறார். எனவே கண்ணம்மாவின் காலில் விழுந்தாவது அவரிடம் மன்னிப்பு கேட்டு, தன்னுடைய மகள்களான லட்சுமி மற்றும் ஹேமாவுடன் சேர்ந்து வாழ துடிக்கும் பாரதி, டெல்லியில் இருந்து கண்ணம்மாவை சந்திக்க செல்கிறார்.

does this mean barathi kannamma 2 script is ready vinusha photo getting viral on social media

இதை அடுத்து பாரதியும் கண்ணம்மாவும் ஒன்று சேர்வார்கள், சீரியலுக்கு சுபம் போடுவார்கள் என எதிர்பார்த்த நிலையில் கடைசியில் கண்ணம்மா பாரதி ஏற்க மறுத்தார். இப்படியான நிலையில், ஹேமாவும் லட்சுமியும் உன்னை தப்பா பேசினவர்கள் யாரும் நமக்கு வேண்டாம் நாம எங்கேயாவது போயிடலாம் என சொல்ல மூவரும் ஊரை விட்டு கிளம்புகின்றனர். இந்த பக்கம் கண்ணம்மாவை தேடி வீட்டுக்கு வரும் பாரதி வீட்டில் யாரும் இல்லாததை பார்த்து கண்ணம்மாவை நான் எங்கே போய் தேடுவேன் என புலம்புகிறார்.

does this mean barathi kannamma 2 script is ready vinusha photo getting viral on social media

இந்நிலையில், கண்ணம்மாவின் போட்டோ சுவரில் வரைந்து இருப்பது போல ஒரு போட்டோவை தன் இன்ஸ்டா பக்கத்தில் குறிப்பிட்டிருந்த, இந்தத் தொடரின் நாயகி வினுஷா coming soon என எழுதி பதிவிட்டுள்ளார். இதை வைத்துப் பார்க்கும்போது, புதிய கதைக்களத்துடன் பாரதி கண்ணம்மா சீசன் 2 தொடங்கலாம் என்றும், அதனை சூசகமாக வினுஷா இப்படி குறிப்பிட்டிருக்கிறார் என்றும் நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

does this mean barathi kannamma 2 script is ready vinusha photo getting viral on social media

Share this post