பிரபல சீரியலில் இருந்து விலகிய திவ்யா.. இனி அவருக்கு பதில் இவர்..
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் ஜெனி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் திவ்யா கணேஷ். இந்த கதாபாத்திரத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளார் திவ்யா.
இதனைத் தொடர்ந்து விஜய் டிவியில் ஒளிபரப்பாக தொடங்கிய செல்லம்மா என்ற சீரியலில் மேகா என்ற கதாபாத்திரத்திலும் நடித்து வந்தார்.
நாளுக்கு நாள் இந்த கதாபாத்திரம் நெகட்டிவாக மாறி வருகிறது. இதன் காரணமாக தற்போது திவ்யா கணேஷ் செல்லம்மா சீரியல் இருந்து விலகிக் கொண்டுள்ளார் என தெரிய வந்துள்ளது. அவருக்கு பதிலாக இந்த சீரியலில் இனி ஸ்ரேயா சுரேந்தர் நடிக்கப் போவதாகவும் தெரியவந்துள்ளது.
Share this post