'அவ்ளோ பெருசு இருக்குனு.. கேவலமா பேசுறாங்க.. அத மக்கள் ஏன் எதுவுமே கேக்கல' - யோகேஷ் வேதனை
வெண்ணிலா கபடி குழு திரைப்படத்தில் நடித்ததன் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் நடிகை மைனா நந்தினி. இதனைத் தொடர்ந்து, பல விஜய் தொலைக்காட்சி சீரியல்களில் நடித்தார். கல்யாணம் முதல் காதல் வரை, சரவணன் மீனாட்சி, உள்ளிட்ட பல சீரியல்கள் இவருக்கு பிரபலம் பெற்று தந்தது. சரவணன் மீனாட்சி தொடரில் நடித்ததன் மூலம் அதில் இவர் பெயர் மைனா, அதே பெயரே இவரது அடைமொழியாக மாறிவிட்டது.
கேடி பில்லா கில்லாடி ரங்கா, காஞ்சனா 3, வம்சம், வேலைனு வந்துட்டா வெள்ளைக்காரன், ரோமியோ ஜூலியட் போன்ற திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் வெளியான, விக்ரம், விருமன் உள்ளிட்ட படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தார். இவர் இரண்டாவதாக திருமணம் செய்தவர் நடிகர் யோகேஷ். இவரும் சின்னத்திரை சீரியல் தொடர்களில் நடித்துள்ளார்.
அதன் மூலம் செம பேமஸ். மைனாவும், அவரது கணவர் யோகியும் மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரை நிகழ்ச்சியில் பங்கு பெற்ற பின்னர் மிகவும் பிரபலமாகினர். சின்னத்திரையில் மக்களுக்கு பிடித்த ஜோடியாகவும் மாறிப் போயினர். சமூக வலைதளங்களில் மிக ஆக்டிவாக இருக்கும் மைனா ஒரு யூடியூப் சேனலையும் தொடங்கி அப்போது வீடியோக்களை பதிவேற்றி வருகிறார்.
தற்போது மைனா, பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு இருக்கிறார். மேலும், இந்த நிகழ்ச்சி தொடக்கத்தில் இருந்தே மைனா ஜாலியாக விளையாடி வருகிறார். இது குறித்து கமல் கூட கண்டித்து இருந்தார். இருந்தும், மைனா நந்தினி, அப்படியே தொடர்ந்து விளையாடி வருகிறார்.
இந்நிலையில், யூடியூப்பில் பிக்பாஸ் நிகழ்ச்சி குறித்து பேசும் சேனல் ஓன்று டாஸ்க்கிற்காக டயப்பர் அணிந்து விளையாடிய மைனா நந்தினியை உருவாக்கேலி செய்யும் வகையில் பேசியிருந்தது. அந்த சேனல் அப்படி மைனாவை உருவாக்கேலி செய்து பேசிய வீடியோ வைரலாகியது. இந்நிலையில் சமீபத்தில் மைனா நந்தினியின் கணவர் யோகேஸ்வரன் பிரபல செய்தி ஊடகம் ஒன்றிக்கு பேட்டியளித்திருந்தார். அதில் மைனா நந்தினியை உருவாக்கேலி செய்த சேனலை கண்டித்து பேசியிருந்தார்.
அந்த பேட்டியில் யோகேஷ் கூறியதாவது `நேற்று நடந்த டாஸ்கில் மைனா நந்தினி டயப்பர் அணிந்து விளையாடியதை பல யூடியூப் சேனல்கள் விமர்சித்து வருகின்றனர். பிக்பாஸ் என்றாலே போட்டியாளர்களின் மீது விமர்சனங்கள் இருக்கத்தான் செய்யும். ஆனால் அதில் ஒரு குறிப்பிட்ட சேனல் மட்டும் மைனா நந்தினியின் அந்தரங்க உறுப்பை கூறி கேலி செய்தாக கூறினார். மேலும் அசீம், விக்ரமன் போன்றவர்களுக்கு ஏதாவது ஒரு பிரச்சனை என்றால் அவர்களுக்கு துணையாக மக்கள் செல்கின்றனர்.
ஆனால் மைனா நந்தினியை இப்படி உருவக்கேலி செய்யும் போது மக்கள் பலரும் அதனை தட்டி கேள்வி கேர்ப்பதை விட்டுவிட்டு அதனை ஆதரித்து கமெண்ட் பாக்ஸில் கருத்துக்களை தெரிவித்திருந்தனர். அந்த இடத்தில் உங்களுடைய வீட்டில் ஒருவரை இப்படி சொல்லியிருந்தால் உங்களுக்கு எவ்வளவு மனவருத்தமமாக இருந்திருக்கும். நான் நினைத்திருந்தால் ஒரு நிமிடத்தில் சேனலுக்கு “ஸ்டிரைக்” கொடுத்திருக்கலாம். ஆனால் அதனை நான் செய்யவில்லை இதற்கு பிறகாவது யாருக்குமே அவர் அப்படி செய்யக்கூடாது என்பதுதான் என்னுடைய விருப்பம் என்று கூறினார்.
மைனா நந்தினியின் கணவர் யோகேஸ்வரன் பேசிய வீடியோ வைரலாகவே மைனாவை உருவாக்கேலி செய்த யூடியூப் சேனல் மன்னிப்பு கேட்டு வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தது. இதற்கு பலரும் வரவேற்பு தெரிவித்து வருகின்றனர்.