ரஜினி வசனத்திற்கு மறைமுகமாக கமல் பதில் கூறியுள்ளாரா ? வைரலாகும் பதிவு ! தீயாய் பரவும் போட்டோ !

Does kamal indirectly answering rajinikanth dialogue viral post

அரசியல், நடிப்பு, பிக் பாஸ் என பிசியாக வலம் வந்த கமல் ஹாசன் நீண்ட இடைவெளிக்கு பிறகு நடிக்கும் திரைப்படம் விக்ரம். மாநகரம், கைதி, மாஸ்டர் உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கியதன் மூலம் தமிழ் திரையுலகை திரும்பி பார்க்க வைத்தவர் இயக்குனர் லோகேஷ் கனகராஜ்.

தற்போது, ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் கமல்ஹாசன் தயாரிப்பு மற்றும் நடிப்பில் விஜய் சேதுபதி, பகத் பாசில், நரேன், காளிதாஸ் ஜெயராம், பிக்பாஸ் சிவானி, தொகுப்பாளினி மகேஸ்வரி மற்றும் மைனா நந்தினி என பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்து வெளியாக இருக்கும் திரைப்படம் விக்ரம்.

இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.இந்த படத்தில் கமலுக்கு ஜோடியாக கன்னடத்தில் இளம் நடிகையாக வலம் வரும் ஷான்வி ஸ்ரீவஸ்தவா நடித்துள்ளார்.

Does kamal indirectly answering rajinikanth dialogue viral post

ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்து வரும் இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து புரோமோஷன் வேலைகள் நடைபெற்று வருவதாக கூறப்பட்டது.

வரும் ஜூன் 3ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ள இந்த படத்தின் டிரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா வருகிற 15ம் தேதி சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது. ரிலீசுக்கு இன்னும் குறைந்த நாட்களே உள்ளதால் இந்த படத்தின் அப்டேட்டுகள் அடுத்தடுத்து வெளியாகிய வண்ணம் உள்ளன.

இந்த படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் பெற்றுள்ளது. இதற்கிடையே அனிருத் இசையில் விக்ரம் படத்தின் முதல் பாடல் ‘பத்தல பத்தல’ பாடல் நேற்று வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது. இப்பாடலை கமல் அவர்களே எழுதி பாடியுள்ளார்.

இந்நிலையில், அஜித் - விஜய் ரசிகர்கள் போல நீண்ட காலத்திற்கு பிறகு ரஜினி -கமல் ரசிகர்கள் சண்டை உருவாகியுள்ளது.

இந்நிலையில், நம் நெட்டிசன்கள் கூர்மையான சிந்தனையினால் தற்போது ஒரு பதிவினை வைரல் செய்து வருகின்ற்னர். அதாவது, ரஜினியின் 2.O படத்தில் “I’m the only one, super one” என ரஜினி வசனம் பேசியிருப்பார்.

Does kamal indirectly answering rajinikanth dialogue viral post

சமீபத்தில், கமல்ஹாசன் அனிருத் உடன் எடுத்த போட்டோ இணையத்தில் வைரல் ஆகி வந்தது. அப்போது அவர் போட்டிருந்த டி-ஷர்ட்டில் “you’re not the only one” என்று எழுதியிருக்கும் வாசகம் தற்போது சர்ச்சையாகி வருகிறது.

Does kamal indirectly answering rajinikanth dialogue viral post

Share this post