சிவகார்த்திகேயனின் 'டான்' படத்துல இவ்ளோ ரஜினி பட Reference-ஆ.? விசில் பறக்கும் காட்சிகள் !

Rajini reference in sivakarthikeyan don movie scenes

மிக குறுகிய காலத்தில் மக்கள் மனதில் இடம் பிடித்து பெரும் அந்தஸ்தை எட்டியுள்ளவர் நடிகர் சிவகார்த்திகேயன். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ரசித்து பார்க்கும் படியான திரைப்படங்களை தற்போது வரை தந்து வருகிறார்.

இவர் நடிப்பில் வெளியான டாக்டர் திரைப்படத்தை தொடர்ந்து இவர் நடித்துள்ள படம் டான். லைக்கா நிறுவனம் தயாரிப்பில் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் சிவகார்த்திகேயன், பிரியங்கா மோகன், எஸ் ஜே சூர்யா, சிவாங்கி, பாலசரவணன், ஆர் ஜே விஜய் மற்றும் பலர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் டான். இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

Rajini reference in sivakarthikeyan don movie scenes

ஏற்கனவே, இப்படத்தில் இருந்து வெளியான எல்லா பாடல்களும் ரசிகர்கள் பேவரைட் லிஸ்டில் இடம் பெற்றுவிட்டது.

இத்திரைப்படம் மே மாதம் 13ம் தேதி அதாவது இன்று திரையரங்கில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இந்நிலையில் இன்று வெளியான டான் படத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் படங்களின் Reference ஆங்காங்கே இருந்துள்ளது ரசிகர்கள் விசில் பறக்கும் அளவிற்கு உள்ளது.

முக்கியமாக படத்தின் துவக்க காட்சிகளில் வகுப்பறையில் எந்திரன் படத்தை சிவகார்த்திகேயன் பார்ப்பது முதல் Reference அமைந்துள்ளது.

முதல் பாதியின் 30 நிமிடங்களை கடந்த பின் சக்கரவர்த்தியும் (சிவகார்த்திகேயன்) - அங்கையற்கன்னியும் (பிரியங்கா மோகன்) படம் பார்க்க தியேட்டருக்கு செல்வர்.

அப்போது அங்கு சிவாஜி திரைப்படம் ஒடிக்கொண்டு இருக்கும். அடுத்த காட்சியில் சிவகார்த்திகேயன், சிவாஜி பட ரஜினிகாந்த் போல மிமிக்ரி செய்து அசத்தியிருப்பார்.

கல்லூரி விழாவில் ரஜினி நடித்த பொல்லாதவன் படத்தின் “நான் பொல்லாதவன்” பாடலை பிரத்யேகமாக இசைத்து சிவகார்த்திகேயன் & நண்பர்கள் நடனமாடுவார்கள்.

இதனை சுட்டிக்காட்டி ரஜினி ரசிகர் என கூறி ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

Share this post