'உனக்கு என்னயா வந்துச்சு.. வாயையும்..' என கொச்சையாக கே ராஜனை கேட்ட பயில்வான் ! வைரலாகும் வீடியோ !

Bayilvaan ranganathan questions openly k rajan about actors salary speech

தமிழ் சினிமாவில் சிறு சிறு முக்கிய கதாபாத்திரங்களிலும், பிரபல காமெடி நடிகராகவும் நடித்து பிரபலம் ஆனவர் நடிகர் பயில்வான் ரங்கநாதன்.

ரஜினி, கமல் உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்துள்ள இவர் தற்போது தனி யூடியூப் சேனலை தொடங்கி சினிமா வட்டாரத்தில் நடக்கும் பல விஷயங்கள் குறித்து பேசி ட்ரெண்டிங் ஆகி வருகிறார்.

சினிமா துறையில் நடக்கும் விஷயங்களோடு விட்டு வைக்காமல், நடிகர், நடிகைகளின் தனிப்பட்ட வாழ்க்கையை குறித்து பகிர்ந்து வருகிறார். நடிகர்-நடிகைகள் பலரும் இவரின் பேச்சு எல்லையை மீறி போவதாக கூறி புகார் கூறி வருகின்றனர்.

Bayilvaan ranganathan questions openly k rajan about actors salary speech

நடிகைகளின் அந்தரங்க வாழ்க்கையை பற்றி மிகவும் கொச்சையாக பேசி வருவதை ரசிகர்கள் பலரும் கமெண்ட் பகுதியில் வசைபாடி வருகின்றனர்.

இந்நிலையில் தயாரிப்பாளர் கே ராஜன், பயில்வான் ரங்கநாதன் பற்றி காவல் துறையில் ஒரு புகார் மனு அளித்துள்ளார். அதில் அவர் பயில்வானை பற்றிய பல விஷயங்களையும் குறிப்பிட்டு, அதில் திரையுலகில் மிக பிரபலமாக இருக்கும் நடிகைகளை பற்றி பயில்வான் அவதூறான வார்த்தைகளை பேசுவது கண்டிக்கத்தக்கது.

இப்படி பொய்யான விஷயங்களைப் பேசி அதன் மூலம் அவர் பிரபலம் அடைய நினைக்கிறார். அவரை எதிர்த்து யாராவது பேசினால் உடனே அவர்களுக்கு பகிரங்க மிரட்டல் விடுக்கிறார்.

மேலும் நடிகைகளை பற்றி பேசி அதன் மூலம் அவர்களை மிரட்டி பணம் பறிக்கிறார் என்றும் ராஜன் தெரிவித்துள்ளார். இப்படி ஒரு பக்கம் இருக்க, அவ்வப்போது, தயாரிப்பாளர் ராஜன் அவர்களும் பிரபல நடிகர் நடிகைகள் அவர்கள் சம்பளம் குறித்த ஒரு சில விஷயங்களை பற்றி மேடைகளில் பேசியுள்ளார்.

Bayilvaan ranganathan questions openly k rajan about actors salary speech

அதன் வீடியோக்கள் அவ்வப்போது சமூக வலைத்தளங்களில் வலம் வருவது வழக்கம். இந்நிலையில், அஜித் மற்றும் விஜய் போன்ற டாப் நடிகர்கள் சம்பளம் குறித்து ராஜன் பேசியுள்ளது குறித்து தற்போது தரமான பதில் கூறி பயில்வான் ரங்கநாதன் வீடியோ வெளியிட்டுள்ளார்.

இப்படி இவர்களுக்குள் மறைமுக சண்டை நடந்து வருகிறது. அந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.

Share this post