விஜய் - சங்கீதா விவாகரத்து செய்தி உண்மையா? சினிமா பிரபலத்தின் வைரல் ட்வீட்
பிரபல இயக்குனர் சந்திரசேகரின் மகன் நமது தற்போதைய தளபதி நடிகர் விஜய். தனது தந்தை இயக்கத்தின் மூலம் திரையுலகில் அடியெடுத்து வைத்த இவர், தற்போது ஆல் இந்தியா லெவெலுக்கு பேமஸ். எட்டிப்பிடிக்க இயலாத அளவிற்கு உச்சத்தில் உள்ள விஜய், 90 களின் பிற்பாதியில் வெளியான படங்கள் பெரும் ரசிகர் பட்டாளத்தை உருவாக்கினார்.
பொங்கல் பண்டிகையையொட்டி இவர் நடிப்பில் வாரிசு திரைப்படம் வெளியானது. என்னதான், திரையுலகை பொறுத்தவரை விஜயை கொண்டாடி வந்தாலும், விஜய் அவர்களின் சொந்த வாழ்க்கை குறித்து நெகட்டிவ் விமர்சனங்களும் கருத்துக்களும் ஏராளமாக உலாவி வருகிறது. அவருக்கும் அவரின் பெற்றோருக்கும் உள்ள கருத்து வேறுபாடு குறித்து அதிகம் பேசப்பட்டு வந்தது.
இந்நிலையில், அவருக்கும் அவரது மனைவிக்கும் விவாகரத்து ஆகவிருப்பதாக தகவல்கள் வேகமாக பரவி வருகிறது. காரணம், நடிகர் விஜய் திரைப்பட விழா, பிரபலங்களின் திருமணம் எது என்றாலும் தனது மனைவியை அழைத்து வருவார். நிறைய ஆடியோ வெளியீட்டு விழாக்களில் பங்குபெற்றுள்ளார். ஆனால் அட்லீ-பிரியா சீமந்த நிகழ்ச்சிக்கும், வாரிசு ஆடியோ வெளியீட்டிலும் தனது மனைவியை அழைத்து வரவில்லை. இதனால் அவர்களுக்குள் பிரச்சனை ஏற்பட்டு பிரிய இருக்கிறார்களோ என பேச்சு அடிபட்டது.
ஏற்கனவே, இப்படி ஒரு பரபரப்பு விஷயம் சென்றுகொண்டிருக்கும் நிலையில், அனைவரையுமே அதிர்ச்சி செய்யும் விதமாக, விஜய்யின் விக்கிபீடியா பக்கத்தில், விஜய் மற்றும் அவருடைய மனைவி சங்கீதா சொர்ணலிங்கம், இருவரும் மியூச்சுவல் விவாகரத்து பெற்று பிரிந்து விட்டதாக பதிவிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும், யாரோ சில கீர்த்தி சுரேஷ் தான் விஜய்யின் பார்ட்னர் என்றும், விஜய்க்கு மூன்று குழந்தைகள் இருப்பது போன்றும்… விக்கிப்பீடியா பக்கத்தில் மாற்றம் செய்துள்ளனர்.
இந்நிலையில், தற்போது, 22 ஆண்டுகள் சங்கீதாவுடன் வாழ்ந்து வந்த விஜய் தற்போது மனைவியை பிரிந்துவிட்டதாக செய்திகள் வைரலாகி வருகிறது. மேலும், விஜய் மற்றும் கீர்த்தி சுரேஷுக்கும் தொடர்பு ஏற்பட்டதால் தான் சங்கீதா விஜய்யை பிரிந்து லண்டன் சென்றுவிட்டார் என்றும் சிலர் கூறி வருகின்றனர்.
இன்னும் சிலரோ, குழந்தைகளுடன் இருப்பதற்காக சங்கீதா வெளிநாடு சென்றுவிட்டதாகவும், அதனால் சில நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள முடியவில்லை, இந்த விவாகரத்து பேச்சு அனைத்தும் வதந்தி என கூறி வருகின்றனர். ஆனால், இதுகுறித்து, சம்மந்தப்பட்ட விஜய், சங்கீதா மௌனம் காத்து வருகின்றனர்.
இந்நிலையில், விநியோகஸ்தர் கோபி தனது ட்விட்டர் பக்கத்தில், இந்த விவாகரத்து செய்தியை முற்றிலும் பொய் என கூறியுள்ளார். இதுபோன்ற செய்தியை கிளப்புபவர்கள் அவர்களது குடும்பத்தில் பெண்கள் இருக்கிறார்கள், இந்த கர்மா அவர்களை வேறொரு ரூபத்தில் வந்து தாக்கும் என பதிவு செய்துள்ளார்.