கீர்த்தி சுரேஷ் உண்மையாக காதலிப்பது இவரை தானா? வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி.. வெளியான பரபரப்பு தகவல்!
நடிகர் விக்ரம் பிரபுவுடன் நடித்த ‘இது என்ன மாயம்’ திரைப்படத்தில் நடித்ததன் கோலிவுட்’ல் அறிமுகமானவர் நடிகை கீர்த்தி சுரேஷ். இருப்பினும், சிவகார்த்திகேயன் ஜோடியாக ‘ரஜினி முருகன்’ படத்தில் நடித்ததன் மூலமாக தமிழ் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார். இவர் பிரபல தயாரிப்பாளர் சுரேஷ் குமார் மற்றும் நடிகை மேனகா அவர்களின் இளைய மகள் ஆவார்.
ரஜினி முருகன் திரைப்படத்தின் மூலம் கிடைத்த புகழைத் தொடர்ந்து, ரெமோ, சாமி 2, தொடரி, பைரவா என விஜய், தனுஷ், விக்ரம், சிவகார்த்திகேயன் உள்ளிட்ட டாப் நடிகர்களுடன் நடித்து முன்னணி நடிகைகளில் ஒருவராக உயர்ந்துள்ளார்.
2018ம் ஆண்டு, பழம்பெரும் நடிகை சாவித்ரி அவர்களின் வாழ்க்கை வரலாற்றை தழுவி திரைப்படமாக எடுக்கப்பட்ட ‘நடிகையர் திலகம்’ திரைப்படத்தில் நடிகை சாவித்ரியை மறுபடியும் கண்முன் கொண்டு வந்தார். இப்படத்திற்கு பான் இந்தியா லெவல் வரவேற்பு கிடைத்தது. இப்படத்திற்கு தேசிய விருதும் பெற்றார் கீர்த்தி சுரேஷ்.
தனது எதார்த்தமான நடிப்பாலும், பக்கத்து வீட்டு பெண் போன்ற தோற்றத்தை கொண்ட அழகாலும், தமிழ், தெலுங்கு, மலையாளம் என அனைத்து தென்னிந்திய மொழிகளிலும் நடித்து முன்னணி நடிகையாக திகழ்ந்து வருகிறார். மேலும், சாணி காயிதம் திரைப்படத்தில் தனது வித்தியாசமான நடிப்பை காட்டி இருந்தார்.
தற்போது, மாமன்னன், தசரா, போலா ஷங்கர் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து வருகிறார். இப்படி அடுத்தடுத்து சில திரைப்படங்களில் கமிட் ஆகி வரும் நிலையில், தளபதி விஜய் மற்றும் இவரை வைத்து பல வதந்திகள் இணையத்தில் பரவி வருகிறது. இந்நிலையில், கீர்த்தி சுரேஷ் கடந்த 13 வருடங்களாக ரிசார்ட் ஓனர் ஒருவரை காதலித்து வருவதாக சமூக வலைதளத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
அந்த நபர் கீர்த்தி சுரேஷ் உடன் பள்ளியில் படித்தவர் என்றும், இருவரும் பள்ளி காலங்களில் இருந்தே காதலித்து வருவதாகவும், இருவருடைய பெற்றோர் வீட்டிலும், இவர்கள் காதலுக்கு சம்மதம் தெரிவித்துள்ள நிலையில், 4 ஆண்டுகள் கழித்து இவர்களின் திருமணம் நடைபெற உள்ளதாக கூடுதல் தகவல்கள் வெளியாகி உள்ளன.
ஏற்கனவே கீர்த்தி சுரேஷின் திருமணம் குறித்து சில தகவல்கள் வெளியாகி அது வதந்தியாக மாறிய நிலையில், இந்த தகவலும் அதே போல் வதந்தியாக இருக்குமா? அல்லது உண்மையாய் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.