படம் தொடங்குவதற்கு முன்பே ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் லால் சலாம் படத்திலிருந்து வெளியேறிய பிரபலம்..!
தமிழ் திரையுலகை பொருத்தவரை சிவாஜி மற்றும் எம்ஜிஆர் அவர்கள் வரிசையில் நடிகரை தலைவர் இடத்தில் வைத்து ரசிகர்கள் கொண்டாடும் அளவிற்கு மக்கள் வைத்திருப்பது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களையே. அவரது ஸ்டைல், பேச்சு, நற்குணம் என அனைத்திற்கும் ரசிகர் கூட்டம் என்ன படையே உள்ளது என்பது தான் உண்மை.
80ஸ்கள் தொடங்கி தற்போது வரை சூப்பர் ஸ்டாராக வலம் வருகிறார். சூப்பர் ஸ்டார் அந்தஸ்தை பெற்றதோடு தலைவர் என ரசிகர்கள் அழைக்கும்படி தனது நற்பண்புகளையும் கொண்டுள்ளவர். பாட்ஷா, படையப்பா, அண்ணாமலை என தனது ஸ்டைல் மூலம் மக்கள் மனங்களை வென்றவர்.
70 வயது ஆன போதிலும் தனது ஸ்டைல், குணம் என எதுவும் மாறாது இன்னும் அதே சூப்பர்ஸ்டார் அந்தஸ்தில் இருக்கிறார். எவ்வளவு பேவரைட் நடிகர்கள் வந்தாலும் இவருக்கான தனி இடத்தை ரசிகர்கள் மாற்றுவதே இல்லை. தற்போது, இவர் நடிப்பில் உருவாகி வரும் ஜெயிலர் திரைப்படத்தின் மீது மிகுந்த எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது.
ஜெயிலர் படத்தை தொடர்ந்து, லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பில் மகள் ஐஸ்வர்யா இயக்கத்தில் விஷ்ணு விஷால், விக்ராந்த் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க ரஜினி சிறப்பு வேளத்தில் நடிக்கிறார். மேலும் இப்படம் கிரிக்கெட் சம்மந்தப்பட்ட கதைக்களத்தை கொண்டதாம்.
இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்க உள்ளதாகவும், இப்படத்தை 2023ம் ஆண்டு திரையரங்குகளில் ரிலீஸ் செய்ய உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த படத்தில் இருந்து விலகுவதாக ஆடை வடிவம் அமைப்பாளர் பூர்ணிமா ராமசாமி ட்விட்டரில் அறிவித்துள்ளார்.