இரவு 10 மணிக்கு போன் செய்த பிரபல நடிகை.. அமீரை காப்பாற்றிய தனுஷ்..!
பிரபல இயக்குனரான பாலாவிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர் இயக்குனர் அமீர். நடிகர் சூர்யாவுடன் மௌனம் பசிதே படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானார்.
தனக்கு ஆங்கிலம் தெரியாததால் ஏற்பட்ட வேதனையை ஒரு மேடையில் அமீர் கூறினார். அதாவது, இரவு 10 மணியளவில், முன்னணி பெரிய நடிகை ஒருவர் அமீருக்கு போன் செய்தார். நல்ல தூக்கத்தில் இருந்த அமீருக்கு அந்த நடிகை முழுவதும் அப்பொழுது ஆங்கிலத்தில் பேசியதால், என்ன செய்வது என்று தெரியாமல் கால் யூ லேட்டர் என்று சொல்லி துண்டித்தேன். பிறகு படப்பிடிப்புக்காக விமான நிலையம் சென்றேன்.
அதே விமானத்தில் தனுஷுடன் நடிகையும் வந்திருந்தார். அவரைப் பார்த்ததும் கொஞ்சம் நகர்ந்து அமர்ந்தேன். ஆனால் தனுஷ் வந்து பேசினார். உடனே அந்த நடிகை டென்ஷனில் கத்த அன்றைக்கு போன் பண்ணால் பேசமுடியாதுனு கட் பண்ணிவிட்டார் என சொல்லி அமீரிடம் சண்டைக்கு நின்றிருக்கிறார். அதன் பிறகுதான் அமீருக்கு ஆங்கிலம் தெரியாது என்ற உண்மையை தனுஷ் அந்த நடிகையிடம் சொல்லி நிலைமையை புரியவைத்திருக்கிறார். இதை அந்த மேடையில் அமீர் கூறினார்.