ஐயோ எனக்கு தமிழ் படிக்க தெரியாது – ஜோவிகாவை கலங்கடித்த BiggBoss?
பிரபல நடிகை வனிதா விஜயகுமாரின் மகள் ஜோவிகா பிக்பாஸ் சீசன் 7ல் பங்கேற்றுள்ளார்.அதில், தனக்கு படிப்பு வராததால் 9ம் வகுப்போடு நிறுத்தியதாக கூறியது பெரும் விவாதத்திற்கு உள்ளானது.
மற்ற போட்டியாளர்கள் யாரும் தனது படிப்பு தொடர்பான எதையும் விவாதிக்கக் கூடாது என்றும் அவர் உத்தரவிட்டுள்ளார். இதனால், பிக்பாஸ் வீட்டிற்குள் பெரும் சண்டை மூண்டது.
சமீபத்தில், பிக் பாஸ் வீட்டிற்குள் ஒரு டாஸ்க் லெட்டரை வந்தது, ‘உங்களில் யாராவது ஒருவர் கன்பர்ஷன் ரூமுக்குள் சென்று பாருங்கள் என்றார். பின்னர் ஜோவிகா முந்திக்கொண்டு முதலில் கன்பர்ஷன் அறைக்குள் நுழைந்தார்.
பிறகு டாஸ்க் லெட்டரைப் பார்த்தவுடன் “ஐயோ எனக்கு தமிழ் படிக்கத் தெரியாது” என்று சொல்லிவிட்டு படிக்க ஆரம்பித்தார். பின்னர், கடிதத்தை பார்த்துவிட்டு “எனக்கு தமிழ் படிக்க தெரியாது, பிக்பாஸ், அவசரமாக வந்துடேனா” என்றார்.
சிறிது நேரம் கழித்து, பிக் பாஸ் பிரதீப்பை அழைத்து, “உள்ளே போனதும், ஜோவிகாவை வெளியே அனுப்பிவிவிட்டார். இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் ஜோவிகாவுக்கு தாய்மொழி தெரியாது, கல்வி முக்கியம் தெரியாது என நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.