'ராக் வித் ராஜா' நிகழ்ச்சியில் மகன்களுடன் ப்ரெசண்ட் ஆன தனுஷ்: வேற லெவலில் பாட்டு பாடி அசத்திய வீடியோ வைரல்..!!

Dhanush sings for his sons in rock with raja

மகன்கள் யாத்ரா மற்றும் லிங்காவுடன் இளையராஜாவின் ‘ராக் வித் ராஜா’ இசைக் கச்சேரியை நடிகர் தனுஷ் கண்டு களித்த புகைப்படம் வைரலாகி வருகிறது.

நடிகர் தனுஷும் ரஜினிகாந்தின் மூத்த மகளான ஐஸ்வர்யாவும் கடந்த 2004 ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். திருமணம் ஆகி 18 ஆண்டுகள் கழித்து இருவரும் இனி பிரிந்து வாழப் போவதாக கடந்த ஜனவரி மாதம் அறிவித்தனர். இருவருக்கும் யாத்ரா, லிங்கா என இரண்டு மகன்கள் உள்ளனர்.

மூத்த மகன் யாத்ரா 2006 ஆம் ஆண்டு பிறந்தார். இரண்டாவது மகன் லிங்கா 2010ஆம் ஆண்டு பிறந்தார். தனது பேரப் பிள்ளைகள் இருவருக்கும் நடிகர் ரஜினிகாந்துதான் பெயர் வைத்தார். இந்நிலையில் தனது மகளும் மருமகனும் பிரிந்துள்ள நிலையில் அவர்களின் பிள்ளைகளான யாத்ராவும் லிங்காவும் தாத்தா ரஜினிகாந்துடன் தான் இருந்து வந்தனர். தற்போது தனுஷ் படப்பிடிப்பு இல்லாமல் ஓய்வில் இருப்பதால் பிள்ளைகளை தன்னுடன் வைத்துள்ளார் என தெரிகிறது.

சமீபத்தில் தனுஷ் தனது மூத்த மகன் யாத்ராவுடன் கொடைக்கானலில் இருந்த போட்டோக்கள் வெளியானது. இந்நிலையில் நேற்று சென்னை தீவுத்திடலில் நடைபெற்ற இளையராஜாவின் இசைக் கச்சேரியை நடிகர் தனுஷ் தனது மகன்களுடன் கண்டு ரசித்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

மேலும், இசைக்கச்சேரியில் இளையராஜாவின் மெட்டுக்கு தனது வரிகளை சேர்த்து பாடல் ஒன்றையும் பாடி ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளார்.

Dhanush sings for his sons in rock with raja

Share this post