'துள்ளுவதோ இளமை' டூ 'வாத்தி'.. தமிழ் மாணவன் - தெலுங்கு வாத்தி.. வேறலெவல் அப்டேட்.. வைரலாகும் மாஸ் போஸ்டர் !

Dhanush 20 years in cinema field replicated in single image by vaathi crew team in poster

2002ம் ஆண்டு வெளியான துள்ளுவதோ இளமை படத்தின் மூலம் அறிமுகமாகி, தற்போது இந்த நடிப்புத்துறையில் 20 ஆண்டுகள் கடந்துவிட்டார். நடிகராக மட்டுமின்றி தயாரிப்பாளர், இயக்குநர், பாடலாசிரியர், பாடகர் என பல அவதாரங்கள் எடுத்துவிட்டார்.

கோலிவுட் முதல் பாலிவுட், ஹாலிவுட் வரை பிரபலம் அடைந்து விட்டார். 20 ஆண்டு திரையுலக பயணம் குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் நீண்ட பதிவு ஒன்றை அவர் பதிவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது .

இந்நிலையில், தனுஷின் 20 ஆண்டு பயணத்தை காட்டும் வகையில் ‘வாத்தி’ படக்குழுவினர் மாஸ் போஸ்டர் ஒன்றை இணையதளங்களில் வெளியிட்டுள்ளனர்.

Dhanush 20 years in cinema field replicated in single image by vaathi crew team in poster

தனுசின் ’துள்ளுவதோ இளமை’ லுக் மற்றும் ’வாத்தி’ லுக் ஆகிய இரண்டும் சேர்த்து இந்த போஸ்டரில் விரைவில் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தெலுங்கில் நாகவம்சியின் சித்தாரா என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்பில் பிரபல தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் திரைப்படம் தெலுங்கு மற்றும் தமிழில் உருவாக உள்ளது. இப்படத்திற்கு தமிழில் வாத்தி எனவும், தெலுங்கில் சார் (Sir) எனவும் தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இப்படத்திற்கு G V பிரகாஷ் இசையமைக்கிறார்.

கல்வித்துறையை அடிப்படையாக கொண்டு உருவாவதை இப்படத்தின் போஸ்டர் மூலம் தெரிந்துகொள்ள முடிகிறது. இந்த படத்தில் தனுசுக்கு ஜோடியாக நடிகை சம்யுக்தா மேனன் நடிக்கிறார். பூஜையுடன் இப்படத்தின் படப்பிடிப்பு ஜனவரி மாதம் தொடங்கியது.

Share this post