இணையத்தில் வெளியான Don 'ஜலபுலஜங்கு' வீடியோ பாடல்.. வைரலாகும் வீடியோ !

Jalabulajangu video promo song from don has been released on youtube

சாதாரண தொகுப்பாளராக பணியாற்றி தனது நகைச்சுவை பேச்சுகளால் மக்கள் மனதில் நின்றவர் நடிகர் சிவகார்த்திகேயன். சின்னத்திரையில் செம பேமஸ் ஆன இவர், தற்போது நடிகர், பாடலாசிரியர், பின்னணி பாடகர், தயாரிப்பாளர் என பல அவதாரங்களில் திரையுலகில் பிரபலம் ஆகியுள்ளார்.

இப்படி மிக குறுகிய காலத்தில் மக்கள் மனதில் இடம் பிடித்து பெரும் அந்தஸ்தை எட்டியுள்ளவர் நடிகர் சிவகார்த்திகேயன். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ரசித்து பார்க்கும் படியான திரைப்படங்களை தற்போது வரை தந்து வருகிறார்.

இவர் நடிப்பில் வெளியான டாக்டர் திரைப்படத்தை தொடர்ந்து இவர் நடித்துள்ள படம் டான்.

Jalabulajangu video promo song from don has been released on youtube

லைக்கா நிறுவனம் தயாரிப்பில் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் சிவகார்த்திகேயன், பிரியங்கா மோகன், எஸ் ஜே சூர்யா, சிவாங்கி, பாலசரவணன், ஆர் ஜே விஜய், சமுத்திரக்கனி, சூரி, மனோபாலா மற்றும் பலர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் டான்.

இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இத்திரைப்படம் மே மாதம் 13ம் தேதி திரையரங்கில் வெளியாக உள்ளதாக ஏற்கனவே அறிவிப்பு வெளியானது.

இப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருக்கும் நிலையில், இப்படத்தில் இருந்து Bae, ஜலபுல ஜங்கு, பிரைவேட் பார்ட்டி போன்ற எல்லா பாடல்களும் ரசிகர்கள் பேவரைட் லிஸ்டில் இடம் பெற்றுவிட்டது.

இப்படத்தின் ட்ரைலர் வெளியாகி சமூக வலைத்தளங்களில் செம வைரல் ஆகி வருகிறது. அதில் அரசியல், காலேஜ் லைஃப், காதல், ரகளை, மிரட்டலான சீன்கள், அழுகை என சகலமும் ட்ரைலரிலே உள்ள நிலையில் மக்கள் ஆர்வத்தை தூண்டியுள்ளது.

தற்போது, ஜலபுலஜங்கு வீடியோ பாடல் வெளியாகியுள்ளது.

Share this post