மீண்டும் சூடுபிடிக்கும் உலகநாயகனின் தேவர்மகன் 2.. இயக்குனர் சொன்ன புதிய அப்டேட் !

devarmagan 2 update said by director after rumours spread on drop of this film

களத்தூர் கண்ணம்மா என்னும் திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடிக்கத் தொடங்கியவர் நம் உலக நாயகன் கமல் ஹாசன். தற்போது, நடிகர், தயாரிப்பாளர், பாடகர், எழுத்தாளர், இயக்குனர், அரசியல் என பல பரிமாணங்கள் கொண்டு பிரபலமாக விளங்கி வருகிறார்.

devarmagan 2 update said by director after rumours spread on drop of this film

தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி என அனைத்து மொழிகளிலும் தனக்கென்ற இடத்தை நிலைநாட்டியவர். தேசிய விருது, கலைமாமணி, விஜய் விருது என பல விருதுகளை குவித்தவர்.

devarmagan 2 update said by director after rumours spread on drop of this film

4 வருடங்களுக்கு பிறகு, இவரது நடிப்பில் கைதி, மாஸ்டர் போன்ற திரைப்படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் ஹாசன், சூர்யா, விஜய் சேதுபதி, பகத் பாசில், ஷிவானி, காளிதாஸ் ஜெயராம் போன்ற பெரிய நட்சத்திர பட்டாளமே நடிப்பில் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட் அடித்த திரைப்படம் விக்ரம். 350 கோடிகளை கடந்து வசூல் பெற்றது.

devarmagan 2 update said by director after rumours spread on drop of this film

இவர் தற்போது பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். அதுமட்டுமின்றி ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் இந்தியன் 2 படத்திலும் நடித்து வருகிறார். இதை தொடர்ந்து, எச். வினோத் இயக்கத்தில் KH233 மற்றும் மணிரத்னம் இயக்கத்தில் KH234 ஆகிய படங்களில் நடிக்கவுள்ளார். இதுதவிர பா.இரஞ்சித், வெற்றிமாறன் ஆகியோரும் கமலுக்கு கதை சொல்லி ஓகே வாங்கி உள்ளனர். இதனால் அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு கமல் செம்ம பிசி.

devarmagan 2 update said by director after rumours spread on drop of this film

இந்நிலையில், மலையாள இயக்குனர் மகேஷ் நாராயணன் இயக்கத்தில் கமல் நடிக்க இருந்த படம் கைவிடப்பட்டு உள்ளதாக தகவல் வெளியானது. விக்ரம் படத்துக்கு முன்னரே இந்த கூட்டணி குறித்து அரசல் புரசலாக பேச்சு அடிபட்டது. இது தேவர்மகன் படத்தின் இரண்டாம் பாகமாக இருக்கும் என்றும் இப்படத்திற்கு கமல் திரைக்கதை அமைக்க உள்ளதாகவும் கூறப்பட்டது.

devarmagan 2 update said by director after rumours spread on drop of this film

தேவர்மகன் 2 தொடங்கப்படாமல் டிராப்பானது என சில தகவல்கள் வெளிவந்த நிலையில், தற்போது, மகேஷ் நாராயணன் சமீபத்திய பேட்டி ஒன்றில் சில தகவல்களை வெளிப்படையாக கூறியுள்ளார். அதில் அவர், ‘தேவர்மகன் 2 படம் டிராப்பாகவில்லை. இது கமல் சார் எழுதிய ஸ்கிரிப்ட். தற்போது அவர் பிசியாக மற்ற படங்களில் நடித்து வருகிறார். அதை முடித்த பிறகு எங்கள் கூட்டணி தொடரும்.. நான் ராஜ் கமல் பிலிம்ஸ் நிறுவனத்தில் நீண்ட காலமாக அங்கமாக இருந்து உள்ளேன்’ என கூறியுள்ளார். இதனால் தேவர் மகன் 2டிராப் ஆகவில்லை என்ற விஷயத்தை கேட்ட ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

Share this post