'இத்தன வருஷமா கஷ்டப்பட்டது போச்சே..' கதறி அழுகும் தனலட்சுமி.. கண்கலங்கிய போட்டியாளர்கள்!
விஜய் தொலைக்காட்சியில் மக்கள் ஆர்வத்துடன் எதிர்பார்த்து காத்திருக்கும் நிகழ்ச்சியில் பிக் பாஸ் ஒன்று. பரபரப்புக்கும் விறுவிறுப்புக்கும் பஞ்சமில்லாத பிக்பாஸ் (BiggBoss) நிகழ்ச்சியில்,கமல் அவர்கள் தொகுத்து வழங்க தமிழில் இதுவரை 5 சீசன் முடிந்துள்ளது.
இந்நிலையில், தற்போது ‘பிக் பாஸ் சீசன் 6’ நிகழ்ச்சி கமல் ஹாசன் தொகுத்து வழங்க தொடங்கப்பட்டுள்ளது. இது 24 நேரமாக OTT தளத்திலும், தொலைக்காட்சியில் இரவு 9 மணிக்கு 1 மணி நேர நிகழ்ச்சியாகவும் ஒளிபரப்பாகி வருகிறது.
பிக்பாஸ் சீசன் 6ல் திருநங்கை சிவின் கணேசன், நடிகர் அசீம், நடிகை ஆயிஷா, நடிகர் மணிகண்டன் ராஜேஷ், நடிகை ரட்சிதா, கிரிக்கெட் வீரர் ராம் ராமசாமி, ராப் பாடகர் ஏ.டி.கே, இலங்கை தொகுப்பாளினி ஜனனி, செய்தி வாசிப்பாளர் விக்ரமன், மிமிக்ரி கலைஞர் அமுதவாணன், வி.ஜே. கதிரவன், பொது மக்களில் ஒருவர் தனலெட்சுமி, மைனா நந்தினி உள்ளிட்டோர் தற்போது விளையாடி வருகின்றனர்.
ஜிபி முத்து மீது ரசிகர்களுக்கு பெரும் எதிர்பார்ப்பு இருந்து வந்த நிலையில் அவர் குடும்ப சூழ்நிலை காரணமாக வெளியேறினார். மெட்டி ஒலி சாந்தி, கானா பாடகர் அசல், ஷெரினா, வி.ஜே.மகேஸ்வரி, நிவாஷினி, ராபர்ட் மாஸ்டர். மாடல் குயின்சி எவிக்ட் ஆகி வெளியேறினர்.
இந்த வாரம் சினிமா பிரபலங்களைப் போல் மாறுவேடம் அணிந்து நடனம் ஆட வேண்டும் என்பது பிக்பாஸ் கொடுத்த டாஸ்க். அந்த வகையில், ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு முக்கிய சினிமா பிரபலங்களின் கதாபாத்திரங்கள் கொடுக்கப்பட்டுள்ளது. நிகழ்ச்சியில் நடந்து வரும் இந்த டாஸ்க்கில் இருந்து ஐந்து நபர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்கள் பிரமாண்டமான கலை நிகழ்ச்சியில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவார்கள் என பிக்பாஸ் அறிவித்திருந்தார்.
அந்த ஐந்து நபர்களை தேர்ந்தெடுக்கும் டாஸ்க் தற்போது நடைபெற்று வருகிறது. அந்த வகையில், தனலட்சுமிக்கு மணிகண்டன் டாஸ்க் கொடுக்கிறார். அவர் அதில் ஒரு பெரிய சீட்டு கம்பெனியில் நீ காசு போட்டிருக்கின்றாய், அந்த பணம் ஏமாற்றப்பட்டுவிட்டது. உன் பொண்ணோட கல்யாணம் அடுத்த வாரம் நடைபெற உள்ளது. அந்த திருமணத்திற்காக சேர்த்து வைத்த காசு மொத்தமாக காலி என்பதால் உன் பொண்ணோட திருமணம் கேள்விக்குறியாகிறது.
இதனை அடுத்து உன்னுடைய ரியாக்ஷன் எப்படி இருக்கும் என்று நடித்துக் காட்ட வேண்டுமென மணிகண்டன் டாஸ்க் கொடுக்கின்றார். இதனையடுத்து தனலட்சுமி ‘இத்தனை வருஷமா கஷ்டப்பட்டது போச்சே’ என கதறி அழுதவாறு நடிக்கும் நடிப்பை பார்த்து சக போட்டியாளர்கள் கண்ணீர் சிந்தும் அளவுக்கு சென்றுள்ளனர். அந்த வீடியோ தற்போது செம வைரலாகி வருகிறது.
#Day60 #Promo2 of #BiggBossTamil #BiggBossTamil6 - இன்று இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BBTamilSeason6 #BiggBoss #பிக்பாஸ் #VijayTelevision @preethiIndia @NipponIndia pic.twitter.com/yRhrtWwRmt
— Vijay Television (@vijaytelevision) December 8, 2022