திக் திக் காட்சிகளுடன்.. நெஞ்சை பதறவைக்கும்.. நயன்தாராவின் 'கனெக்ட்' ட்ரைலர்..

connect movie trailer video trending on social media

கேரளா மாநிலத்தை சேர்ந்த நயன்தாரா, 2004ம் ஆண்டு ஹரி இயக்கத்தில் வெளியான ஐயா படம் மூலம் தமிழ் திரையுலகில் ஹீரோயினாக அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து, அடுத்தப்படமே சூப்பர்ஸ்டார் ஜோடியாக சந்திரமுகி படத்தில் நடித்தார். இப்படத்தில் ஹோம்லியான லுக்கில் சில கதாபாத்திரங்களில் நடித்திருந்தார்.

connect movie trailer video trending on social media

கஜினி, சிவகாசி, வல்லவன் போன்ற போன்ற படங்களில் சூர்யா, விஜய், சிம்பு போன்ற தமிழ் டாப் நடிகர்களுடன் நடித்தார். கடந்த சுமார் 20 ஆண்டுகளில், தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற அனைத்து தென்னிந்திய மொழி படங்களில் நடித்து தென்னிந்திய திரையுலகின் லேடி சூப்பர்ஸ்டாராக வலம் வருகிறார்.

connect movie trailer video trending on social media

கோலமாவு கோகிலா, டோரா, கொலையுதிர் காலம் போன்ற படங்களில் நடித்து தனக்கென இடத்தை பிடித்தார். இதன் நடுவே, நானும் ரவுடி தான் படத்தில் நடித்ததன் மூலம் அப்படத்தின் இயக்குனர் ஆன, விக்னேஷ் சிவன் உடன் காதல் ஏற்பட்டு 7 ஆண்டுகளுக்கு மேலாக காதலித்து வந்தனர்.

connect movie trailer video trending on social media

மகாபலிபுரத்தில் கடந்த ஜுன் 9ம் தேதி நயன்தாரா - விக்னேஷ் சிவன் திருமணம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து, டபுள் ட்ரீட்டாக கடந்த சில வாரங்களுக்கு முன்னர், வாடகை தாய் முறையில் இரட்டை ஆண் குழந்தைகளை விக்கி - நயன் தம்பதி பெற்றெடுத்தனர். சரியாக விதிமுறையை கடைபிடிக்கவில்லை என்று சர்ச்சை எழவே, தாங்கள் 2016ம் ஆண்டே பதிவு திருமணம் செய்து கொண்டதாகவும், 2021ம் ஆண்டு வாடகை தாய் முறையில் குழந்தை பெற்றெடுக்கும் வேலையை தொடங்கியதாகவும் சாட்சிகளை விசாரணையில் சமர்ப்பித்தனர்.

connect movie trailer video trending on social media

இதனைத் தொடர்ந்து, நயன்தாரா நடிப்பில் வெளியாகவிருக்கும் கனெக்ட் படத்தின் டீசர் வெளியிடப்பட்டது. விக்னேஷ் சிவனின் ரவுடி பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் மாயா, கேம் ஓவர் போன்ற திரில்லர் படங்களை இயக்கிய அஸ்வின் சரவணன் இயக்கத்தில் நயன்தாரா, வினய், சத்யராஜ், பாலிவுட் நடிகர் அனுபம் கேர் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் கனெக்ட். கனெக்ட் படத்தையும் அவர் அதே பாணியில் இயக்கி உள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்தின் ஷூட்டிங் முடிந்து ரிலீசுக்கு தயாராகி உள்ளது.

connect movie trailer video trending on social media

படத்தின் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. ஹாரர் ஜர்னரில் எடுக்கப்பட்டுள்ள இந்த படம், 95 நிமிடங்கள் இடைவெளி இல்லாமல் ஓடும் படமாக எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த திரைப்படம் கிறிஸ்துமஸ் தினத்தை முன்னிட்டு டிசம்பர் 22ம் தேதி வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

connect movie trailer video trending on social media

இந்நிலையில், இப்படத்தின் ட்ரைலர் வெளியாகி செம ட்ரெண்ட் ஆகி வருகிறது. ஹாரர் மற்றும் திரில்லர் கதை அம்சத்தில் உருவாகி உள்ள படத்தின் ட்ரைலரில் திக் திக் நிமிடங்களுடன் நடைபெறும் காட்சிகள் இடம்பெற்றுள்ள. நயன்தாராவின் மகள் ஒரு அமானுஷ்ய சக்தியிடம் மாட்டிக்கொள்ள அவரை அதில் இருந்து எப்படி மீட்கிறார் நயன்தாரா என்பதை பரபரப்பான காட்சிகளுடன் காட்டியுள்ளார் இயக்குனர்.

Share this post