'பிகில்' படம் பார்த்த ரசிகருக்கு 7 ஆயிரம் ரூபாய் நஷ்ட ஈடு கொடுக்க நீதிமன்றம் உத்தரவு !

Court orders to pay 7 thousand rupees compensation for a fan who watched movie in theatre

ஷங்கர் உதவி இயக்குனராக பணியாற்றி வந்த அட்லீ, ராஜா ராணி திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து, 2வது படமே விஜய் நடிப்பில் தெறி திரைப்படத்தை இயக்கும் வாய்ப்பை பெற்றார். தொடர்ந்து, மெர்சல், பிகில் உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கினார்.

Court orders to pay 7 thousand rupees compensation for a fan who watched movie in theatre

2019ம் ஆண்டு, அட்லீ இயக்கத்தில் தளபதி விஜய் டபுள் ரோலில் நடித்து வெளியான திரைப்படம் பிகில், நயன்தாரா, விவேக், கதிர், யோகி பாபு, அமிர்தா அய்யர், வர்ஷா பொல்லம்மா, இந்திரஜா, இந்துஜா என ஒரு திரையுலக பட்டாளமே நடித்து வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த திரைப்படம். இப்படம் மிகப்பெரிய அளவில் வரவேற்பையும், அதிக வசூலையும் பெற்றிருந்தது.

Court orders to pay 7 thousand rupees compensation for a fan who watched movie in theatre

மாஸ்டர் திரைப்படத்தை தொடர்ந்து, நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான பீஸ்ட் திரைப்படத்தில் நடித்திருந்தார். இதனைத் தொடர்ந்து, தில் ராஜூ தயாரிப்பில் வம்சி இயக்கத்தில் விஜய், ரஷ்மிகா மந்தனா நடிப்பில் உருவாகும் திரைப்படம் தளபதி66. இப்படத்திற்கு வாரிசு என பெயரிட்டுள்ளனர். இதன் 3 போஸ்டர்கள் விஜயின் பிறந்த நாளன்று வெளியானது.

Court orders to pay 7 thousand rupees compensation for a fan who watched movie in theatre

இப்படத்தை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கப்போவதாக தகவல் வெளியானது. விரைவில் இப்படம் குறித்து அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்தை பார்த்த ரசிகர் ஒருவருக்கு 7 ஆயிரம் ரூபாய் இழப்பீடு தர நீதிமன்றம் உத்தரவிட்டு இருக்கும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

Court orders to pay 7 thousand rupees compensation for a fan who watched movie in theatre

இதற்கான காரணம் ஒரு டிக்கெட்டின் விலை தான். ஆம், பொதுவாக பிரபல நடிகர்களின் படம் வெளியானாலே, திரையரங்களில் டிக்கெட்டின் விலை கூட்டி வசூல் பார்ப்பது என்பது எல்லோருக்கும் தெரிந்தது தான். இருந்தாலும் ரசிகர்கள் முந்திக் கொண்டு டிக்கெட் வாங்கி ரசிகர்கள் பார்க்கிறார்கள்.

Court orders to pay 7 thousand rupees compensation for a fan who watched movie in theatre

அந்த வகையில், கடந்த 2020, சென்னையை சேர்ந்த தேவராஜன், அயனாவரம் பாரதி நகரில் உள்ள கோபிகிருஷ்ணா ருக்மணி தியேட்டரில் நடிகர் விஜய் நடித்த பிகில் படத்தை பார்க்கப் போயிருந்தார். ஆன்லைன் வாயிலாக இவர் 223.60 ரூபாய் கட்டணம் முன்பதிவு செய்து இருந்தார்.

Court orders to pay 7 thousand rupees compensation for a fan who watched movie in theatre

இதை எதிர்த்து இவர் நுகர்வோர் மன்றத்தில் திரையரங்கின் மீது புகார் அளித்துள்ளார். அதில் அவர் கூறியிருந்தது, அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட 113 ரூபாய் கூடுதல் கட்டணத்தை வசூலிக்கப்படுகிறது. இது கட்டண விதிகளுக்கு முரணானது. கூடுதல் கட்டணம் வசூலிப்பது குறித்து திரையரங்கம் அதிகாரிகளிடம், போலீசாரிடம் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

Court orders to pay 7 thousand rupees compensation for a fan who watched movie in theatre

கூடுதலாக வசூலிக்கப்பட்ட டிக்கெட் கட்டணத்துடன் 4.80 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என்று அவர் சென்னை மாவட்ட வடக்கு நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கு விசாரணையில் தியேட்டர் தரப்பிலிருந்து யாரும் ஆஜராகவில்லை. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, தியேட்டர் நிர்வாகம் நியாயமற்ற வர்த்தக நடைமுறை ஈடுபட்டதால் நிர்வாகம் குறைபாடு உள்ளது.

சினிமாவுக்கு கூடுதலாக வசூலிக்கப்பட்ட தொகை உடன் 5,000 ரூபாய் இழப்பீடு, 2000 ரூபாய் வழக்குச் செலவை மனுதாரருக்கு தியேட்டர் நிர்வாகம் வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டு உள்ளது. தற்போது இந்த தகவல் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

Share this post