கிரிக்கெட் வீரர் K.L.ராகுல் - வாரிசு நடிகை திருமணமா ? மறுப்பு தெரிவித்த பிரபல தமிழ் பட நடிகர் !

Kl rahul to marry popular actress athiya shetty daughter of suniel shetty

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரராக வலம் வருபவர் கே.எல்.ராகுல். இவருக்கு காயம் ஏற்பட்டுள்ள காரணமாக தற்போது நடைபெற்று வரும் இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இருந்து ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.

Kl rahul to marry popular actress athiya shetty daughter of suniel shetty

தற்போது சிகிச்சைக்காக முனீச் சென்றுள்ளார். அவருடன் பாலிவுட் நடிகை அதியா ஷெட்டியும் உடன் சென்றுள்ளார். பாலிவுட் திரையுலகில் சூப்பர்ஸ்டாராக வலம் வந்தவர் சுனில் ஷெட்டி. இவர் தமிழ் படமான ரஜினியின் தர்பார் படத்தில் வில்லனாக நடித்திருந்தார். இவரின் மகள் அதியா ஷெட்டி.

Kl rahul to marry popular actress athiya shetty daughter of suniel shetty

தற்போது அதியா ஷெட்டி, கிரிக்கெட் வீரர் கே.எல்.ராகுலும் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வருகின்றனர். அடிக்கடி ஜோடியாக வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணமும் மேற்கொண்டு வருகின்றனர். மகளின் காதலுக்கு எந்தவித மறுப்பும் சுனில் ஷெட்டி தெரிவிக்கவில்லை என தெரிகிறது.

Kl rahul to marry popular actress athiya shetty daughter of suniel shetty

இதனிடையே கே.எல்.ராகுல் மற்றும் அதியா ஷெட்டிக்கு மூன்று மாதங்களில் திருமணம் நடக்க இருப்பதாகவும், இதற்கான ஏற்பாடுகளை அவர்களது குடும்பத்தினர் செய்து வருவதாகவும் செய்திகள் வெளியாகி வருகின்றன.

Kl rahul to marry popular actress athiya shetty daughter of suniel shetty

இந்நிலையில், மகளின் திருமண வதந்தி குறித்து பாலிவுட் நடிகர் சுனில் ஷெட்டி விளக்கம் அளித்துள்ளார். அதன்படி கே.எல்.ராகுல் - அதியா ஷெட்டி திருமணம் குறித்து பரவி வரும் தகவல் எதுவும் உண்மையில்லை எனவும், இதுவரை எந்தவித ஏற்பாடுகளும் செய்யவில்லை எனக்கூறி வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

Share this post