ஜோதிகா பதிலாக 'சந்திரமுகி 2'வில் கதாநாயகியாக நடிக்கவிருக்கும் நடிகை !

Chandramukhi 2 heroine instead of jyothika information spreading around internet

2005ம் ஆண்டு பி.வாசு இயக்கத்தில் ரஜினிகாந்த், பிரபு, ஜோதிகா, நயன்தாரா, நாசர், வடிவேலு, சோனு சூட், வினீத், மாளவிகா, கே.ஆர்.விஜயா மற்றும் பலர் நடிப்பில் வெளியாகிய காமெடி ஹாரர் திரைப்படம் சந்திரமுகி.

இப்படம் மலையாள திரைப்படமான Manichitrathazhu படத்தின் தமிழ் ரீமேக் ஆகும்.

Chandramukhi 2 heroine instead of jyothika information spreading around internet

சிவாஜி ப்ரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் உருவான இப்படத்திற்கு வித்யாசாகர் இசையமைத்திருந்தார்.

பாக்ஸ் ஆபிஸில் நல்ல கலெக்சனை பார்த்த இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படம் ஜோதிகாவின் நடிப்பு பயணத்தில் நல்ல மைல்கல்லை அமைத்து தந்தது.

Chandramukhi 2 heroine instead of jyothika information spreading around internet

இதன் தொடர்ச்சியாக, ரஜினிக்கு பதிலாக ராகவா லாரன்ஸ் 2ம் பக்கத்தில் நடிக்கவுள்ளார் எனவும், இயக்குனர் பி.வாசு இந்த படத்தின் ஷூட்டிங்கை விரைவில் தொடங்குவுள்ளார் என பல தகவல்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகின.

இந்நிலையில் சந்திரமுகி 2வை தயாரிப்பதாக இருந்த சன் பிக்சர்ஸ் பின் வாங்கியதால் படப்பிடிப்பு துவங்கவில்லை, லைகாவுடன் ஒப்பந்தமான பி.வாசு தற்போது மீண்டும் திரைக்கதையை துவங்கியுள்ளார். இதன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது.

Chandramukhi 2 heroine instead of jyothika information spreading around internet

Chandramukhi 2 heroine instead of jyothika information spreading around internet

சந்திரமுகி பட முதல் பாகத்தில் ஜோதிகா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்த நிலையில், 2ம் பாகத்தில் யார் கதாநாயகியாக நடிக்கப்போகிறார்? இல்லை ஜோதிகா மீண்டும் கதாநாயகியாக நடிப்பாரா? என்று பலரும் கேட்டு வந்தனர்.

இந்நிலையில், இப்படத்தில் கதாநாயகியாக அனுஷ்கா, ராஷி கண்ணா அல்லது ஆண்ட்ரியா கதாநாயகியாக நடிப்பார் என தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து விரைவில் படக்குழுவிடம் இருந்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Share this post