பெண்கள் குளிப்பதை வீடியோ எடுத்தாரா ? பிரபல நடிகர் மீது புகார் செய்த பெண்கள்.. நடிகரின் கார் கண்ணாடி உடைப்பு !

Actor meesai rajendranath took video of bathing ladies complaint raised

சினிமா திரையுலகில் குணசித்திர வேடங்களிலும், வில்லன் கதாபாத்திரத்திலும் நடிப்பதன் மூலம் பிரபலம் ஆனவர் நடிகர் மீசை ராஜேந்தரன். இவர் நெல்லை மாவட்டம் முக்கூடல் பகுதியை சேர்ந்தவர். தற்போது இவர் சென்னை சூளைமேட்டில் வசித்து வருகிறார். இவரது மீசை மற்றும் லுக் காரணமாக திரையுலகில் பிரபலமாக திகழ்பவர்.

Actor meesai rajendranath took video of bathing ladies complaint raised

கடந்த சில நாட்களுக்கு முன் மீசை இராஜேந்திரன் தன்னுடைய சொந்த ஊரில் நடந்த நிகழ்ச்சிக்காக வந்திருக்கிறார். அப்போது முத்துமாரியம்மன் கோவிலுக்கு தரிசனம் செய்ய குடும்பத்துடன் சென்றிருக்கிறார். ஏற்கனவே முத்துமாரியம்மன் கோவில் அறநிலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. அங்கு கோவில் பெயரைச் சொல்லி சிலர் பணமோசடி முறைகேடு செய்துள்ளனர்.

Actor meesai rajendranath took video of bathing ladies complaint raised

இது தொடர்பாக, நடிகர் மீசை ராஜேந்திரன் மதுரை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்து இருந்தார். மேலும், நீதிமன்ற தீர்ப்பை மீறி யாரிடமும் அனுமதி பெறாமல் கோவிலை புனரமைக்கும் பணியில் சிலர் ஈடுபட்டு இருக்கிறார்கள். இந்நிலையில், கோவிலுக்கு சென்ற ராஜேந்திரன் அவர்கள் வெள்ளை அடிப்பதை பார்த்து கேள்வி கேட்டு இருக்கிறார்.

Actor meesai rajendranath took video of bathing ladies complaint raised

அங்கு நடந்த சம்பவங்கள் குறித்து நீதிமன்ற தீர்ப்பு மற்றும் முன்அனுமதி பெறாமல் நடத்துவது குறித்தும் கேள்வி கேட்டுள்ளார். அதற்கு இரு தரப்பினருக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டு இருக்கிறது. இதனை அடுத்து மீசை ராஜேந்திரன் அவர்கள் தன்னை தாக்க முயற்சித்ததாகவும், நீதிமன்ற தீர்ப்பை மீறி செயல்படுவதாகவும் கூறி முக்கூடல் காவல் நிலையத்தில் புகார் அளித்து இருக்கிறார்.

Actor meesai rajendranath took video of bathing ladies complaint raised

இதன் பின்னர், ஊருக்கு திரும்பி கொண்டிருந்த நிலையில் சொக்கலான்புரம் மெயின் ரோடு அருகே குடும்பத்தினருடன் காரில் வந்த போது ஒரு சிலர் வழிமறித்து காரின் பின் கண்ணாடியை கல்வீசி உடைத்து தங்களை தாக்க முயற்சித்ததாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடிகர் மீசை ராஜேந்திரன் புகார் அளித்து இருக்கிறார். தாக்குதல் நடத்திய நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அந்த மனுவில் குறிப்பிட்டு இருக்கிறார்.

Actor meesai rajendranath took video of bathing ladies complaint raised

இதற்கிடையே, நெல்லை மாவட்டம் முக்கூடலில் ஆற்றில் பெண்கள் குளிப்பதை நடிகர் ராஜேந்திரநாத் வீடியோ எடுப்பதாக, அப்பகுதி பெண்கள் குற்றம்சாட்டியுள்ளனர். 200க்கும் மேற்பட்ட பெண்கள் ஆண்டுதோறும் இதே பிரச்சனை நடந்து வருவதாகவும், எனவே எங்களுக்கு நிரந்தர தீர்வு வேண்டும் என கோரி முக்கூடல் அரிராம் சேட் வளாகத்தில் திரண்டனர்.

Actor meesai rajendranath took video of bathing ladies complaint raised

இது குறித்து தகவலறிந்து வந்த, முக்கூடல் காவல் ஆய்வாளர் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Share this post