வேஷ்டி அணிய கூடாது.. கட்டளையிட்ட மணிரத்னம் ? சர்ச்சையை கிளப்பும் பதிவு !

Blue sattai maaran tweets about ponniyin selvan teaser event

புகழ்பெற்ற மறைந்த எழுத்தாளர் கல்கி கிருஷ்ணமூர்த்தி அவர்களின் “பொன்னியின் செல்வன்” நாவலை அடிப்படையாக கொண்டு, “இரண்டு பாகங்களாக இயக்குனர் மணிரத்னம் இயக்கும் திரைப்படம் தான் “பொன்னியின் செல்வன்”.

Blue sattai maaran tweets about ponniyin selvan teaser event

மிகுந்த எதிர்பார்ப்புடன் பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்ட இப்படத்தின் படப்பிடிப்புகள் பாண்டிச்சேரி, ஐதராபாத், குவாலியர், ஆர்ச்சா, மகேஸ்வர், பொள்ளாச்சி, உடுமலை, மைசூர் நகரங்களில் நடந்தது. லைகா மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவங்கள் இணைந்து தயாரித்திருக்கும் இத்திரைப்படம் இரண்டு பாகங்களாக பிரம்மாண்டமாக உருவாகி இருக்கிறது.

Blue sattai maaran tweets about ponniyin selvan teaser event

இதில் முதல் பாகமான “பொன்னியின் செல்வன் - பாகம் 1” வருகிற செப்டம்பர் 30ம் தேதி திரைக்கு வர இருப்பதாக அதிகாரபூர்வ அறிவிப்பு வெளிவந்தது. பொன்னியின் செல்வன் முதல் பாகத்தில் சியான் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்யா லெக்ஷ்மி, த்ரிஷா, பிரபு, சரத்குமார், விக்ரம் பிரபு, கிஷோர், ஜெயராம், லால், ரஹ்மான், அஸ்வின் ஆகியோர் நடிக்கிறார்கள்.

Blue sattai maaran tweets about ponniyin selvan teaser event

இப்படத்தின் எடிட்டிங் ஸ்ரீகர் பிரசாத், கலை இயக்குனராக தோட்டா தரணி, ரவி வர்மன் ISC ஒளிப்பதிவை செய்கிறார். இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். பல பழங்கால இசைக்கருவிகளை இசையின் முழுமைக்காக பயன்படுத்தியுள்ளதாக சொல்லப்படுகிறது.

Blue sattai maaran tweets about ponniyin selvan teaser event

படத்தின் முக்கியப் பகுதி சோழப் பேரரசின் தலைநகரான தஞ்சாவூர் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது. 2ம் பாகம் 2023 கோடையில் பெரிய திரைகளில் வரக்கூடும் என கூறப்படுகிறது.

Blue sattai maaran tweets about ponniyin selvan teaser event

முக்கிய கதாபாத்திரங்களின் பெயருடன் புகைப்படத்தை வெளியிட்டனர். இதில், ஆதித்த கரிகாலனாக விக்ரம், ஐஸ்வர்யா ராய் பச்சன் நந்தினி, வந்தியத் தேவனாக கார்த்தி, குந்தவையாக த்ரிஷா ஆகியோரின் போஸ்டரை வெளியிட்டுள்ளது. இப்படத்தின் பிரம்மிக்க வைக்கும் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

Blue sattai maaran tweets about ponniyin selvan teaser event

இந்நிலையில், போஸ்டர்கள் ஒவ்வொன்றாக சர்ச்சையில் சிக்கியது, அதன் பின்னர் பொன்னியின் செல்வன் டீசரை பாகுபலியுடன் ஒப்பிட்டு தெலுங்கு மற்றும் தமிழ் ரசிகர்கள் பேசி வந்தனர். மேலும், பொன்னியின் செல்வன் படத்தில் நடித்த முக்கிய நடிகர்கள் 30 பேருமே அதன் பிள்ளையார் சுழியான டீசர் வெளியீட்டு விழாவில் பங்கேற்காமல் போனதே மாபெரும் புறக்கணிப்பாக மாறி உள்ளது. மணிரத்னம் சரியாக அழைக்கவில்லையா? அல்லது ஆளுக்கொரு காரணத்தை சொல்லி நடிகர்களும், மற்ற முக்கிய பிரபலங்களும் பங்கேற்கவில்லையா? என்பது தெரியவில்லை.

Blue sattai maaran tweets about ponniyin selvan teaser event

இந்நிலையில், ப்ளூசட்டை மாறன் ட்வீட் செம வைரலாகவும் பெரும் பேச்சு பொருளாகவும் மாறியுள்ளது. தமிழர்களின் பாரம்பரிய ஆடையான வேட்டி அணிந்து வரக் கூடாது என இயக்குநர் மணிரத்னம் கோரிக்கை விடுத்தாரா அல்லது ஆர்டர் போட்டாரா? ஏன் யாருமே வேட்டி அணிந்து டீசர் வெளியீட்டு விழாவுக்கு வரவில்லை என்கிற கேள்வியை ப்ளூ சட்டை மாறன் தனது ட்விட்டர் பக்கத்தில் எழுப்பி உள்ளார்.

Blue sattai maaran tweets about ponniyin selvan teaser event

Share this post