டிஸ்சார்ஜிற்கு பின் சீயான் விக்ரமின் பதிவு ? வைரலாகும் வீடியோ !

Chiyaan vikram old video getting viral on social media

பிரபல முன்னணி நடிகராக தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி உள்ளிட்ட மொழி திரையுலகில் டாப் நடிகராக வலம் வருபவர் நடிகர் விக்ரம். விளம்பர படங்களில் மற்றும் தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வந்த இவர், என் காதல் கண்மணி திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார்.

Chiyaan vikram old video getting viral on social media

ஆரம்ப காலங்களில் பெரிதும் பிரபலம் அடையாத இவர், சேது திரைப்படத்தின் மூலம் திரையுலகையே திரும்பி பார்க்க வைத்தார். இவர் நடிகர் மட்டுமல்லாது டப்பிங் ஆர்ட்டிஸ்ட் மற்றும் பாடகராகவும் பணியாற்றியுள்ளார். காசி, ஜெமினி, பிதாமகன், அந்நியன், ஐ போன்ற திரைப்படங்கள் இவருக்கு மைல்கல்லாக அமைந்தது.

Chiyaan vikram old video getting viral on social media

நடிப்பிற்காக தனது உடல்நிலையும் பொருட்படுத்தாது, தன்னை வறுத்தி தனக்கான கதாபாத்திரத்தில் நேர்த்தி கொடுப்பவர். இவரது மகன் துருவ் விக்ரம், தற்போது, ஆதித்யா வர்மா, மஹான் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

Chiyaan vikram old video getting viral on social media

தற்போது நடிகர் விக்ரம், பொன்னியின் செல்வன், கோப்ரா உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து முடித்து உள்ளார். இந்நிலையில் விக்ரமுக்கு இன்று திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டு சென்னையில் பிரபல தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார்.

Chiyaan vikram old video getting viral on social media

இந்த தகவல் ரசிகர்களுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அவர் விரைவில் குணமடைந்து திரும்ப வேண்டும் என ரசிகர்கள் பிராத்தித்து வருகின்றனர். ஏற்கனவே கொரோனாவால் பாதிக்கப்பட்டு மீண்ட நடிகர் விக்ரம் தற்போது மீண்டும் உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது திரையுலகை அதிர்ச்சிப்படுத்தியுள்ளது. அவருக்கு மாரடைப்பாக இருக்கலாம் என கருதப்பட்டு வந்தது.

ஆனால் அந்த செய்தி உண்மை இல்லை என மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டு இருக்கிறது. Chest discomfort காரணமாக விக்ரம் மருத்துவமனையில் அட்மிட் ஆனதாகவும், அதற்காக நிபுணர் மருத்துவ குழுவினர் சிகிச்சை அளித்து வருகின்றனர் என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர். அவருக்கு மாராடைப்பு ஏற்படவில்லை, உடல்நிலை தற்போது சீராக இருக்கிறது. விரைவில் அவர் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார்” எனவும் மருத்துவமனை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Chiyaan vikram old video getting viral on social media

இந்நிலையில், விக்ரம் டிஸ்சார்ஜ் ஆகி வீட்டிற்கு திரும்பிய நிலையில், ஒரு வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில், அவர் தனது ரசிகர்களின் அன்பிற்கு நன்றி கூறியுள்ளார். இதனால், மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆன பிறகு எடுத்த வீடியோ என பரவி வருகிறது. ஆனால், அது உண்மையில் 5 வருடங்களுக்கு முன் எடுக்கப்பட்ட வீடியோ.

Chiyaan vikram old video getting viral on social media

Share this post