’பிகில்’ மாரியம்மாவுக்கு திடீரென நடந்த திருமணம்.. மாப்பிள்ளை யாரு தெரியுமா ? வாழ்த்து தெரிவித்த சக-நடிகை.. வெளியான புகைப்படங்கள்
அட்லீ இயக்கத்தில் விஜய், நயன்தாரா, விவேக் மற்றும் பலர் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த திரைப்படம் பிகில். இப்படத்தில், football டீமில் பெண்கள் அணியில் நிறைய இளம் கதாநாயகிகளும் நடித்திருந்தனர்.
அதில் அம்ரிதா ஐயர், வர்ஷா, இந்திரஜா, காயத்ரி ரெட்டி, இந்துஜா ரவிச்சந்திரன் இப்படத்திற்கு பின்னரும் சில திரைப்படங்களில் கமிட் ஆகி பிரபலம் அடைந்து வருகின்றனர்.
இந்நிலையில், இதில் ஒரு நடிகைக்கு திருமணம் நடந்துள்ளது. அதன் புகைப்படங்கள் செம வைரல் ஆகி வருகிறது. ‘பிகில்’ திரைப்படத்தில் மாரி கேரக்டரில் கால்பந்து வீராங்கனையாக நடித்த நடிகை காயத்ரி ரெட்டி, கவின் நடித்த ‘லிப்ட்’ திரைப்படத்திலும் நடித்துள்ளார்.
பின்னர், ஜீ தமிழில் ஒளிபரப்பான ’சர்வைவர் தமிழ்’ தொலைக்காட்சி நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், சமீபத்தில் காயத்ரி ரெட்டி தனது நிச்சயம் முடிந்த புகைப்படங்களை பதிவிட்டிருந்தார்.
இந்நிலையில், சினிமாவில் வளர்ந்து வரும் நடிகையான காயத்ரி ரெட்டி திடீரென தனது காதலரை திருமணம் செய்து கொண்டேன் என திருமண புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு இன்பதிர்ச்சி கொடுத்துள்ளார். எளிமையான முறையில் இந்து முறைப்படி காயத்ரி ரெட்டியின் திருமணம் நடைபெற்றுள்ளது.
மாடல் அழகியும் நடிகையுமான காயத்ரி ரெட்டிக்கும் அவரது காதலருக்கும் கடந்த ஏப்ரல் 29ம் தேதி எளிமையான முறையில் நிச்சயம் நடைபெற்றது. அதன் பிறகு திருமணத்தை சினிமா பிரபலங்களுக்கு எல்லாம் சொல்லி பிரம்மாண்டமாக நடத்துவார் என அவரது ரசிகர்கள் நினைத்த நிலையில், எந்தவொரு சத்தமும் காட்டாமல் திடீரென எளிமையான முறையில் திருமணத்தை செய்து கொண்டார் காயத்ரி ரெட்டி.
ரசிகர்களும், பிரபலங்களும் அவருக்கு சமூக வலைத்தளம் வாயில் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர். பிகில் படத்தில் காயத்ரி ரெட்டியுடன் பாண்டியம்மாவாக நடித்த ரோபோ சங்கரின் மகள் இந்திரஜா சங்கர் “Congratulations happy married life akka” என வாழ்த்தி உள்ளார். சர்வைவர் தமிழ் நிகழ்ச்சியிலும் இந்திரஜா சங்கர் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.