கூட்ட நெரிசலில் அத்துமீறி தகாத முறையில் கை வைத்த நபர்.. பளார்விட்ட நடிகை.. வைரலாகும் வீடியோ..
மலையாள சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து வருபவர் நடிகர் நிவின் பாலி. இவர் நடிப்பில் Saturday Night என்னும் திரைப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதனால், இப்படத்தின் ப்ரமோஷனுக்காக கோழிக்கோட்டில் இருக்கும் பிரபல மால் ஒன்றில் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
அதற்காக அப்படத்தின் கதாநாயகி சானியா ஐயப்பன் மற்றும் கிரேஸ் ஆண்டனி ஆகியோரும் கலந்து கொண்டனர். மாலில் ஏராளமான ரசிகர்கள் கூட்டம் அலைமோதியதால் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் பவுன்ஸ்சர்கள் திணறினர். தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
இதற்கிடையில் சானியா ஐயப்பன் கூட்டத்திற்குள் சிக்கியதால் ரசிகர் ஒருவர் நடிகை கிரேஸ் ஆண்டனியிடம் தவறான முறையில் நடந்து கொண்டுள்ளார். பாலியல் ரீதியாக அத்துமீறிய நபரை நோக்கி கோபத்தில் திரும்பி சானியா அந்த நபரை பளார் என்று கன்னத்தில் அறைந்துள்ளார்.
இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதுகுறித்து சானியா ஐயப்பன் இன்ஸ்டாகிராமில் ஒரு பதிவினை போட்டுள்ளார். அதில், நிகழ்ச்சி சிறப்பாக நடந்தது. உங்கள் பாசத்திற்கு நன்றி. சக நடிகை மீது கூட்டத்தில் ஒருவர் அத்துமீறினார். அதேபோல் என்னிடமும் நடந்து கொண்டார்கள்.
அவரால் ஏதும் செய்யமுடியவில்லை என்பதால் நான் அப்படி நடந்து கொண்டேன். இதுபோல் சம்பவம் யாருக்கும் நடக்கூடாது என பதிவிட்டு பகிர்ந்துள்ளார்.