"ஐய்யோ.. அது நா இல்ல.." ரசிகரின் கேள்வியால் பயந்து அதிர்ச்சியான அனிதா சம்பத்.. வைரலாகும் வீடியோ !
தொலைக்காட்சி சீரியல்களில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் வரவேற்பு பெற்று வெள்ளித்திரையில் அடியெடுத்து வைத்தவர்களை பார்த்ததுண்டு. அந்த வரிசையில், தொகுப்பாளர்களும், செய்தி வாசிப்பாளர்களும் வெள்ளித்திரை மற்றும் சின்னத்திரை நடிகைகளுக்கு இணையாக பேன் பாலோயர்ஸ் பெற்று பிரபலம் அடைவதும் தற்போது அரங்கேறி வருகிறது.
இவர்களுக்கென தனி ரசிகர் பட்டாளங்கள், ஆர்மி, fan page உருவாகி வருகிறது. இதற்கு எடுத்துக்காட்டாக, மணிமேகலை, DD, பிரியங்கா, கண்மணி, ரம்யா என பலரும் உள்ளனர். இதில் ஒரு சிலர் சினிமா மற்றும் சின்னதிரைகளில் நடிக்க ஆர்வம் காட்டியும் வருகின்றனர். அந்த வகையில், நியூஸ்7 தமிழ் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றி வந்தவர் அனிதா சம்பத்.
தற்போது, சன் டிவியில் 6 மணி செய்திகள் மற்றும் வணக்கம் தமிழா நிகழ்ச்சிகளில் தோன்றி வருகிறார். இது மட்டுமின்றி, சர்க்கார், காலா, காப்பான், 2.0, ஆதித்யா வர்மா, உள்ளிட்ட படங்களில் செய்தி வாசிப்பாளராகவும், தொகுப்பாளராகவும் ஒரு சில காட்சிகளில் நடித்துள்ளார். இப்படி பிரபலம் அடைந்த அனிதா சம்பத்திற்கு, பிக் பாஸ்’ல் பங்கேற்கும் வாய்ப்பு கிடைத்தது.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலப்படமான விமர்சனங்கள் இவர் மீது வந்த போதிலும் அதை பற்றி பெரிதும் கண்டுகொள்ளவில்லை. அதன் பிறகு சமீபத்தில் OTT தளத்தில் ஒளிபரப்பான பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் பங்கேற்றார். அதிலும், இவரது சில வீடியோக்கள் செம வைரல் ஆனது. தற்போது தனக்கென்ற தனி யூடியூப் சேனல்’ம் நடத்தி வருகிறார்.
2019ம் ஆண்டு தனது நீண்ட நாள் காதலரான பிரபா என்பவரை திருமணம் செய்து கொண்ட அனிதா, இந்த ஜோடி பிக் பாஸ் பின்னர் மிக பிரபலம். அனிதாவிற்கு மேக்கப் மீது ஆர்வம் அதிகம், அதனை பற்றிய வீடியோக்களை அதிகம் பதிவிட்டு வருகிறார். மேலும், தனது சில போட்டோஷூட் புகைப்படங்களையும் அவ்வப்போது சமூக வலைதளபக்கங்களில் பதிவிட்டு வருகிறார்.
சமீபத்தில், சொந்த வீடு ஒன்றை தங்களது பெரும் முயற்சியால் வாங்கியுள்ளதையும், அதன் புகைப்படங்களையும் சந்தோசமாக சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டார்.
இந்நிலையில், அனிதா சம்பத் அளித்திருந்த பழைய பேட்டி அனிதா ஒன்று தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அதில் அவர் கூறியதாவது, ஆட்டோ ஓட்டுனர் ஒருவர், நீங்கள் என்ன வேலை செய்கிறீர்? என்று கேட்டார். அதற்கு, நியூஸ் சேனலில் வேலை செய்கிறேன் என்று சொன்னேன். உடனே அவர் நீங்கள் தானே நிறைய பாட்டுகளை போடுவீர்கள். உங்களுடைய பெயர் கூட மேகலை தானே என்று சொன்னார்.
பின் நான் நியூஸ் வாசிப்பவள். அவர் மணிமேகலை என்று சொன்னேன். இன்னொரு நாள் சன் டிவியில் நியூஸ் வாசிப்பதற்கு ஆடிஷன் சென்று இருந்தேன். அப்போது அந்த ஆடிஷன் யாருமே இல்லை. இரண்டு பசங்க மட்டும் என்னிடம் வந்து உங்களிடம் செல்பி எடுக்க வேண்டும் என்று கேட்டார்கள். எனக்கு கொஞ்சம் பதட்டமாக இருந்தது. பின், டேய் மணிமேகலை வாடா! செல்பி எடுக்கலாம் என்று சொன்னார். அப்ப நான் மணிமேகலை இல்லை என்று சொன்னேன். பலரும் ஆரம்பத்தில் என்னை மணிமேகலையாகவே நினைத்து பேசினார்கள் என்று கூறி இருந்தார்.
சன் மியூசிக்கில் பிரபலமான வி.ஜே வாக வேலை பார்த்து இருந்தவர் மணிமேகலை. அதன் பின் இவர் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி இருக்கிறார். அதுமட்டும் இல்லாமல் இவருக்கென ஒரு தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது. இதனிடையே மணிமேகலை- உசேன் என்பவரை நீண்ட வருடமாக காதலித்து திருமணம் செய்து கொண்டார்கள்.
மணிமேகலை திருமணத்திற்கு பிறகு கொஞ்சம் பிரேக் எடுத்து கொண்டாலும் தற்போது இவர் பல நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார். அதுமட்டும் இல்லாமல் இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலம் அடைந்தார் என்றே சொல்லலாம். தற்போது இவர் பட நிகழ்ச்சிகளின் ப்ரோமோஷன்களிலும், டிவி நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று வருகிறார்.