இதுதான் பிக்பாஸ் சீசன் 6 வீடா ? வைரலாகும் மிக பிரம்மாண்டமான செட் போட்டோஸ் !
விஜய் தொலைக்காட்சியில் மக்கள் ஆர்வத்துடன் எதிர்பார்த்து காத்திருக்கும் நிகழ்ச்சியில் பிக் பாஸ் ஒன்று. பரபரப்புக்கும் விறுவிறுப்புக்கும் பஞ்சமில்லாத பிக்பாஸ் (BiggBoss) நிகழ்ச்சியில்,கமல் அவர்கள் தொகுத்து வழங்க தமிழில் இதுவரை 5 சீசன் முடிந்துள்ளது.
இந்நிலையில், ‘பிக் பாஸ் அல்டிமேட்’ நிகழ்ச்சியை கமல் 3 வாரமும், மீதம் சிம்பு அவர்களால் தொகுத்து வழங்கப்பட்டது. இதையடுத்து, அடுத்த சீசன் துவங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
OTT தள 24 மணி நேர ஷோவில் 5 சீசன்களில் பங்கேற்ற போட்டியாளர்கள் சிலர் பங்கேற்றனர். பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியை முதல் 3 வாரம் கமல் ஹாசன் தொகுத்து வழங்கி வந்த நிலையில், அரசியல், ஷூட்டிங் என பிசியாக இருப்பதால் விலகுவதாக கமல் கூறி விட்டு விலகவே, சிம்பு மீதமிருந்த வாரங்கள் தொகுத்து வழங்கினார்.
அடுத்ததாக பிக்பாஸ் சீசன் 6 துவங்கப்பட்டால், அதில் தொகுப்பாளராக கமல்ஹாசன் வருவாரா? சிம்பு வருவாரா? என்ற கேள்வி ரசிகர்கள் மனதில் இருந்து வந்த நிலையில், 6-வது சீசனையும் கமல்ஹாசன் தான் தொகுத்து வழங்க உள்ளார். இதனை பிக் பாஸ் ப்ரோமோ வீடியோ மூலம் தெரிந்து கொள்ள முடிந்தது.
பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி துவங்கவதற்கான ஏற்பாடுகள் மற்றும் போட்டியாளர்கள் தேர்வு விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், இந்த நிகழ்ச்சி விரைவில் துவங்குவதற்கு வாய்ப்புகள் அதிகம் என தகவல் வெளியானது.
இதுதவிர இதுவரை எந்த சீசனிலும் இல்லாத வகையில், இம்முறை பொதுமக்களில் ஒருவர் பிக்பாஸ் போட்டியாளராக கலந்துகொள்ள இருக்கிறார். இதற்காக நேர்காணல் வைத்து அந்த ஒரு போட்டியாளரை தேர்ந்தெடுக்கும் பணி தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6-வது சீசன் வருகிற அக்டோபர் 2ம் தேதி தொடங்கப்படும் என கூறப்பட்டு வந்த நிலையில், தற்போது திடீரென அந்நிகழ்ச்சி துவங்கும் தேதி மாற்றப்பட்டு உள்ளது. அதன்படி, வருகிற அக்டோபர் 9ம் தேதி துவங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் கலந்துகொள்ள உள்ள போட்டியாளர்கள் குறித்த விவரங்களும் அவ்வப்போது வெளியான வண்ணம் உள்ளன. அதன்படி நடிகைகள் மனிஷா யாதவ், ஷில்பா மஞ்சுநாத், தர்ஷா குப்தா, ராஜா ராணி சீரியல் நடிகை அர்ச்சனா, தொகுப்பாளினிகள் டிடி மற்றும் அஞ்சனா, நடிகர் அஜ்மல், பாடகி சூப்பர் சிங்கர் ராஜலட்சுமி, கவர்ச்சி நடிகை கிரண், டி இமானின் முன்னாள் மனைவி மோனிகா, ரக்க்ஷன், பாலிமர் செய்தி வாசிப்பாளர் ரஞ்சித், சின்னத்திரை நடிகை ஸ்ரீநிதி, ஜிபி முத்து, காமெடி நடிகர் மதுரை முத்து ஆகியோரின் பெயர்கள் இதுவரை லீக் ஆகி உள்ளன.
இதில் அதிகாரப்பூர்வமாக யாரெல்லாம் பிக்பாஸ் வீட்டுக்குள் செல்லப் போகிறார்கள் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். இந்நிலையில், பிக்பாஸ் வீடு எப்படி இருக்கும் என்பது குறித்த ஒரு புகைப்படம் வெளியாகியிருக்கிறது. ப்ரோமோவில் காடுகளைப் பற்றியும், விலங்குகளை பற்றியும் கமல்ஹாசன் பேசியிருந்தார். எனவே வீடும் அப்படிப்பட்ட ஒரு செட்டப்பில் தான் இருக்கிறது. அந்த புகைப்படத்தை பாருங்கள்.