‘டேய், அனிரூத் எட்ட போடா டேய்’.. ஜோனிதாவை மறைத்ததால் திட்டிய ரசிகர்.. வைரலாகும் வீடியோ
பிரபல இசையமைப்பாளராக வலம் வருபவர் அனிருத். 2012ம் ஆண்டு தனுஷ் மற்றும் ஸ்ருதி ஹாசன் நடிப்பில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் வெளியான 3 படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகி தனது முதல் படத்திலேயே மிக பிரபலம் அடைந்தவர்.
3 படத்தில் இடம்பெற்ற “Why This Kolaveri Di” பாடல் செம வைரல் ஆகி யூடியூப் தளத்தில் ரெகார்ட் பிரேக் செய்தது. இதனைத் தொடர்ந்து, எதிர்நீச்சல், வணக்கம் சென்னை, மாரி, மான் கராத்தே, நானும் ரவுடி தான், பேட்ட, டாக்டர், பீஸ்ட், டான், காத்துவாக்குல ரெண்டு காதல் என பல வெற்றி திரைப்படங்களுக்கு இசையமைப்பாளராக பணியாற்றியுள்ளார்.
மேலும், வேறு இசையமைப்பாளர் திரைப்படங்களில் ஒரு சில பாடல்களையும் பாடியுள்ளார். அந்த பாடல்கள் செம ஹிட் ஆகி அதற்கும் பல விருதுகளை குவித்துள்ளார். பல மியூசிக் ஆல்பம்களையும் வெளியிட்டுள்ளார். அஜித், விஜய், கமல், ரஜினி, தனுஷ் என பல முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இசையமைத்து இருக்கிறார்.
இவரது மெலோடி பாடல்கள், குத்து பாடல்கள் எது என்றாலும் அதற்கு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. தற்போதைய இளம் தலைமுறையினர்களுக்கு பேவரைட் ஆக மாறியுள்ளார்.
படங்களில் தன்னுடைய இசை மூலம் பட்டையை கிளப்பி வரும் அனிருத், அவ்வப்போது சர்ச்சையில் சிக்குவதும் உண்டு. இவரும் பாடகி ஜோனிதா காந்தியும் பங்கேற்ற ஒரு கான்செர்ட் ஒன்றின் வீடியோ செம வைரலாகி வருகிறது.
பிரபல பின்னணி பாடகியான ஜோனிட்டா காந்தி, ஹிந்தி, தமிழ் மற்றும் பஞ்சாபி மொழி பாடல்களை பாடி வருபவர். தமிழ் மொழியில், ஏ.ஆர். ரஹ்மான் இசையமைப்பில் மெண்டல் மனதில் பாடலை ஓ காதல் கண்மணி படத்திற்காக பாடினார்.
அதனைத் தொடர்ந்து, 24 படத்திற்காக மெய் நிகரா, அச்சம் என்பது மடமையடா படத்திற்காக இது நாள், காற்று வெளியிடை படத்திற்காக அழகியே போன்ற பாடல்களை பாடியுள்ளார். அதன் பின்னர், வேலைக்காரன் படத்தில் இறைவா, சங்க தமிழன் படத்தில் சண்டைக்காரி நீதான் போன்ற பல பிரபல பாடல்களை பாடியுள்ளார்.
டாக்டர் படத்திற்காக செல்லமா பாடலை பாடிய இவர், அதன் லிரிக்கல் வீடியோவில் நடித்துள்ளார். இதனைக் கண்ட ரசிகர்கள் அவருக்கு ஆர்மி தொடங்கிவிட்டனர். தற்போது பீஸ்ட் படத்தில் அரபிக் குத்து பாடலுக்காகவும் ஆடியுள்ளார். ஹிந்தி, பஞ்சாபி, தமிழ், மராத்தி, ஆங்கிலம், கன்னடம், மலையாளம் என பாடல்கள் பாடி வரும் ஜோனிட்டா, விக்னேஷ் சிவன் - நயன் அவர்களின் ரவுடி பிக்ச்சர்ஸ் தயாரிப்பில் Walking/Talking Strawberry Icecream என்னும் படத்தில் நடிக்கவுள்ளார்.
அவ்வப்போது, இவர் தனது சமூக வலைத்தளங்களில் பதிவிடும் ஹாட் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் ட்ரெண்ட் ஆகி வருகிறது. சமீப காலமாக அனிருத்தும் ஜோனிட காந்தி இருவரும் சேர்ந்து ஒன்றாக பணிபுரிந்து இருக்கிறார்கள். இந்நிலையில், சமீபத்தில், அனிருத் இசை நிகழ்ச்சி ஒன்றை நடத்தி இருந்தார். இதில் அனிருத்துடன் இணைந்து ஜோனிதாவும் சில பாடல்களை பாடியிருந்தார்.
அப்போது மேடைக்கு கீழே இருந்த ரசிகர் ஒருவர் ஜோனிதாவை அனிருத் மறைத்தார் என்று அனிருத் எட்ட போடா டேய் என்று கத்தி இருக்கிறார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வாயிலாக பரவி வருகிறது.
I love this video so much 😂
— 💛💜 𝓚𝓲𝓽𝓽𝔂𝓯𝓲𝓻𝓮 💜💛 (@clearfire_99) September 21, 2022
Man actually stepped back after that https://t.co/Q23ZLluezH