பில்டிங்கில் இருந்து கையசைத்த ரசிகருக்கு காரில் இருந்து டாடா காட்டிய தனுஷ்.. படுவைரலாகும் வீடியோ..

dhanush gesture towards his fan getting viral on social media

2002ம் ஆண்டு வெளியான துள்ளுவதோ இளமை திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் நடிகர் தனுஷ். இவர், இயக்குனர் செல்வராகவன் அவர்களின் தம்பி மற்றும் தயாரிப்பாளர் - இயக்குனர் கஸ்தூரி ராஜா அவர்களின் மகன் ஆவார்.

dhanush gesture towards his fan getting viral on social media

காதல் கொண்டேன், திருடா திருடி, சுள்ளான், புதுப்பேட்டை போன்ற படங்களில் நடித்ததன் மூலம் தனக்கென்ற தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியுள்ளார். பொல்லாதவன், ஆடுகளம், 3, வேலையில்லா பட்டதாரி, வடசென்னை, கர்ணன் போன்ற படங்கள் மூலம் செம ஹிட் ஆகிவிட்டார். நடிகராக மட்டுமின்றி தயாரிப்பாளர், இயக்குநர், பாடலாசிரியர், பாடகர் என பல அவதாரங்கள் எடுத்துவிட்டார்.

dhanush gesture towards his fan getting viral on social media

தனது திறமை மூலம் பல விமர்சனங்களையும் தாண்டி பாராட்டுகளையும் விருதுகளையும் குவித்து வருகிறார். ஒல்லியாக இருக்கும் இவனெல்லாம் ஹீரோவா என கேலி கிண்டல் பேசியவர்கள் தற்போது இவர் ஹாலிவுட், பாலிவுட் வரை சென்றது பார்த்து விடாமுயற்சியால் விஸ்வரூப வெற்றிபெற்று தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக வலம் வருகிறார்.

dhanush gesture towards his fan getting viral on social media

இந்த வருட தொடக்கத்தில் நடிகர் தனுஷ் ஐஸ்வர்யாவுடனான 18 வருட வாழ்க்கையை முடித்துள்ளதாக அறிக்கை வெளியிட்டார். அது அனைவருக்குமே அதிர்ச்சியாக தான் இருந்தது. விவாகரத்து பெற்ற தனுஷ் தனது மகன்களுடன் அவ்வப்போது அதிக நேரம் செலவிட்டு வருகிறார். மீண்டும் இருவரும் சேரப்போவதாக அவ்வப்போது தகவல் வெளியாகி வருகிறது.

dhanush gesture towards his fan getting viral on social media

சமீபத்தில், இவர் நடிப்பில் வெளியான திருச்சிற்றம்பலம் திரைப்படம் பெரும் வெற்றியைபெற்றது. விரைவில், நானே வருவேன், வாத்தி உள்ளிட்ட திரைப்படங்கள் வெளியாகவுள்ளன. இந்நிலையில், இவர் நடிக்கும் கேப்டன் மில்லர் படத்தின் பூஜை நடைபெற்ற புகைப்படங்கள் இணையத்தில் வெளியானது.

dhanush gesture towards his fan getting viral on social media

தற்போது தனுஷ் லேட்டஸ்ட் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. இந்த வீடியோவில் தனுஷ் காரில் மெயின் ரோட்டில் வந்து கொண்டிருக்கிறார். அவர் வருவது தெரிந்து மாடியில் இருந்து ஒருவர் வீடியோ எடுக்க தனுஷ் உடனே அவருக்கு கை காண்பித்து செல்கிறார். இந்த வீடியோ தற்போது ட்வீட்டரில் பெருமளவு ட்ரெண்ட் ஆகி வருகிறது. இதனை பார்த்த ரசிகர்கள் தனுஷை வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

Share this post