முக அழகுக்காக தனது ரத்தத்தையே பூசிக்கொண்டு ஜூலி செய்த சிகிச்சை.. வைரலாகும் வீடியோ..
ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது பிரபலம் அடைந்த ஒருவர் ஜூலி. வீர தமிழச்சி என பெயரை பெற்ற இவர், சமூக வலைத்தளங்கள் முழுவதும் வைரல் ஆகி, சாதாரண பொதுமக்கள் முதல் பிரபலங்கள் வரை பேசும் அளவிற்கு ஒருவராக மாறினார். இதன் மூலம், கிடைத்த பிரபலத்தினால் கமல் ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் சீசன் 1 நிகழ்ச்சியில் பங்கேற்கும் வாய்ப்பை பெற்றார்.
அந்த நிகழ்ச்சியில், இவரது பெயர் மொத்தமாக அடிபட்டு பல நெகடிவ் இமேஜ்களை பெற்றார். அதன் பின்னர், அந்த நெகட்டிவ் விமர்சனங்களை மாத்த நிறைய நிகழ்ச்சிகளிலும், விழாக்களிலும் பங்கேற்று வந்தார். மேலும், சில திரைப்படங்களிலும் சிறு சிறு கதாபாத்திரத்தில் நடித்தார். சமூக வலைத்தளங்களில் பிசியாக போட்டோஸ், வீடியோ என பதிவிட்டு வந்த ஜூலி, BB ஜோடிகள் சீசன் 1 நிகழ்ச்சியில் பங்கேற்றார். இதில் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார்.
அதனைத் தொடர்ந்து, BB அல்டிமேட் நிகழ்ச்சியில் பங்கேற்று அனைவரது மனதிலும் நல்ல இடத்தை பிடித்து தொடர்ந்து பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்றார். தன்னுடைய நேர்மையான முகத்தை காட்டி மக்களின் மனதை கவர்ந்து இறுதி வாரம் வரை வந்தார்.
BB நிகழ்ச்சியில் பெற்ற நெகட்டிவ் விமர்சனங்களை உடைக்கும் வகையில், நேர்மையான முகத்தை காட்டி மக்களின் மனதை கவர்ந்து இறுதி வாரம் வரை இருந்து வந்தார். இந்நிகழ்ச்சியில், ஜூலி வெற்றி பெறுவார் என்று ரசிகர்கள் பலரும் எதிர்பார்த்திருந்தனர். ஜீ தமிழ் டிவியில் ஒளிபரப்பாகி வரும் தவமாய் தவமிருந்து சீரியலில் சிறப்புத் தோற்றத்தில் நடித்து இருந்தார்.
பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சிக்கு பின்னர், சொந்தமாக யூடியூப் சேனல் ஒன்றை ஜூலி தொடங்கினார். இதில் இவர் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். முன்பு மாதிரி இல்லாமல் ஜூலி எது செய்தாலும் பாசிட்டிவ் கமெண்ட்ஸ் குவிந்து வருகிறது. இந்நிலையில், முக அழகுக்காக ஜூலி செய்து செய்திருக்கும் செயல் குறித்து அவர் வீடியோ வெளியிட்டது பரபரப்பை கிளப்பி வருகிறது. அதாவது, ஸ்கின் கிளினிக் ஒன்றில் VAMPIRE FACIAL எனப்படும் ரத்தம் மூலம் முகத்தை அழகுப்படுத்தும் சிகிச்சையை ஜூலி செய்துள்ளார்.