Viral Video: பிரஸ் மீட்டில் சர்ச்சை கிளப்பும் வகையில் கேள்விகள் கேட்ட பயில்வான்.. கடுப்பான துல்கார் சல்மான்..

பிரபல மலையாள மொழி நடிகர் மம்மூட்டி அவர்களின் மகன் துல்கர் சல்மான், தற்போது தமிழ் & மலையாள திரையுலகில் முக்கிய நடிகராக வலம் வருபவர். 2012ம் ஆண்டு வெளியான Second ஷோ என்னும் திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமான இவர், இதனைத் தொடர்ந்து, உஸ்தாத் ஹோட்டல், ABCD என பல மலையாள மொழி திரைப்படங்களில் நடித்து வந்தார்.
2014ம் ஆண்டு, வாயை மூடி பேசவும் என்னும் திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். பின்னர், ஓ காதல் கண்மணி, மகாநதி, கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால், ஹே சினாமிகா உள்ளிட்ட தமிழ் திரைப்படங்களில் நடித்தார்.
பெங்களூர் டேஸ், சார்லி போன்ற திரைப்படங்கள் இவர் நடிப்பில் வெற்றித்திரைப்படமாக அமைந்தது. தற்போது, தெலுங்கு இயக்குனர் ஹனு ராகவ்புடி இயக்கத்தில் துல்கர் சல்மான், மிருணாள் தாகூர், ராஷ்மிகா மந்தனா மற்றும் பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் “சீதா ராமம்”. தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, கன்னடம் என 5 மொழிகளிலும் வரும் ஆகஸ்ட் 5ம் தேதி ரிலீசுக்கு தயாராகியுள்ளது.
படத்தின் வெளியிட்டு தேதி நெருங்கியுள்ளதால் ப்ரோமோஷன் வேலைகள் நடைபெற்று வருகின்றன. இப்பட பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் நடந்தது. இதில், துல்கர் சல்மான் மற்றும் நாயகி மிருணாள் தாகூர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த press meet event’ல் பயில்வான் ரங்கநாதன் சர்ச்சை கேள்விகளை கேட்டு வந்தார். அவர் பேசும் போது, “படத்திற்கு சீதா ராமம்’னு பெயர் வெச்சுருக்கீங்க, படத்தில் உங்கள் பெயர் ராம் என்று சொன்னீங்க, அப்போ ராமம்னா என்ன?” என பயில்வான் கேட்க ,”ஒரு கதை’ல வர ரெண்டுபேர பத்தி சொல்லும்போது இரண்டையும் ஒன்றாக சேர்த்து சீதா-ராமம் என்று வைத்துள்ளார்கள்” துல்கர் பதில் கூறினார்.
ஆனால் பயில்வான், “எனக்கு ராமம்க்கு அர்த்தம் தெரிஞ்சாவனும்” என கேட்க, துல்கர் “கதையை நான் எழுதல, பெயர் பற்றி கூற இயக்குனர் இங்கு இல்லை, அவர் இருந்தால் சூழ்நிலை இப்படி இருக்காது” என மீண்டும் கூறினார். மீண்டும் பயில்வான், “அப்போ அர்த்தமே தெரியாமல் படம் நடித்தீர்களா” என கேட்க, “நான் படத்தில் நடிக்கும் போது பெயர் வைக்கவில்லை, ஒரு மாதம் முன்பு தான் பெயர் வைத்தார்கள்” என பதில் கூறினார். ஆனால் பதில் சொல்லும் போது கொஞ்சம் அவருடைய முகம் இறுகிப் போனது. இந்த வீடியோ வைரலாகி வருகிறது.