'த்ரிஷாவுக்கு போட்டி வந்தாச்சு' என இலங்கை பெண் ஜனனியை சொன்ன கமல்ஹாசன்.. ஏன் இப்டி சொன்னாருன்னு பாருங்க !
பிரபல மாடலிங் அழகியான த்ரிஷா, மிஸ் சென்னை போட்டிக்கு பிறகு திரையுலகத்தில் அறிமுகமானார். ஜோடி திரைப்படத்தில் துணை கதாபாத்திரத்தில் நடித்த த்ரிஷா, மௌனம் பேசியதே திரைப்படத்தின் மூலம் செம பேமஸ் ஆனார். தமிழ் தெலுங்கு மலையாளம் உள்ளிட்ட மொழி திரையுலகில் டாப் நடிகையாக வலம் வருகிறார். 90ஸ்களில் கனவு கன்னியாக இருந்த இவர், விண்ணைத்தாண்டி வருவாயா, 96, கொடி போன்ற திரைப்படங்கள் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடத்தை பிடித்து வருகிறார்.
விஜய், அஜித், சூர்யா, சிம்பு, ரஜினி, கமல் போன்ற உச்ச நட்சத்திரங்களின் படங்களில் அவர்களுக்கு ஜோடியாக நடித்துள்ளார். தற்போது, பொன்னியின் செல்வன் படத்தில் இவரது கதாபாத்திரமும், படத்தின் ப்ரோமோஷன் போது இவர் வந்த புகைப்படங்கள் என இணையத்தில் செம ட்ரெண்ட் ஆனது. இந்நிலையில், த்ரிஷாவுக்கு போட்டியாக இன்னொரு த்ரிஷா வந்தாச்சு என தகவல் தீயாக பரவி வருகிறது.
விஜய் தொலைக்காட்சியில் மக்கள் ஆர்வத்துடன் எதிர்பார்த்து காத்திருக்கும் நிகழ்ச்சியில் பிக் பாஸ் ஒன்று. பரபரப்புக்கும் விறுவிறுப்புக்கும் பஞ்சமில்லாத பிக்பாஸ் (BiggBoss) நிகழ்ச்சியில்,கமல் அவர்கள் தொகுத்து வழங்க தமிழில் இதுவரை 5 சீசன் முடிந்துள்ளது.
இந்நிலையில், தற்போது ‘பிக் பாஸ் சீசன் 6’ நிகழ்ச்சி கமல் ஹாசன் தொகுத்து வழங்க தொடங்கப்பட்டுள்ளது. இது 24 நேரமாக OTT தளத்திலும், தொலைக்காட்சியில் இரவு 9 மணிக்கு 1 மணி நேர நிகழ்ச்சியாகவும் ஒளிபரப்பாக தொடங்கி இருக்கிறது.
பிக்பாஸ் சீசன் 6ல் யூடியூபர் ஜி.பி.முத்து, கானா பாடகர் அசல் கோலார், திருநங்கை சிவின் கணேசன், நடிகர் அசீம், நடன இயக்குனர் ராபர்ட் மாஸ்டர், சீரியல் நடிகை ஆயிஷா, மாடல் ஷெரினா, சின்னத்திரை நடிகர் மணிகண்டன் ராஜேஷ், நடிகை ரட்சிதா, மாடல் மற்றும் கிரிக்கெட் வீரர் ராம் ராமசாமி, ராப் பாடகர் ஏ.டி.கே, இலங்கை தொகுப்பாளினி ஜனனி, மெட்டி ஒலி சாந்தி, செய்தி வாசிப்பாளர் விக்ரமன், மிமிக்ரி கலைஞர் அமுதவாணன், வி.ஜே.மகேஸ்வரி, சன் மியூசிக் தொகுப்பாளர் வி.ஜே. கதிரவன், மாடல் குயின்சி, மாடல் நீவா, பொது மக்களில் ஒருவர் தனலெட்சுமி உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
இந்த சீசனில் நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன்பே ஆர்மி பெற்றவர் இலங்கையை சேர்ந்த தொகுப்பாளர் ஜனனி. அவரை அறிமுகப்படுத்திய கமல் இவரும் லாஸ்லியா போல செய்தி வாசிப்பாளரா என கேள்வி எழுப்பினார். செய்தி வாசிப்பாளர் + anchor என அவர் கூறினார்.
அதன் பின் பேசிய ஜனனி “வருங்காலத்தில் என்ன ஆக போறீங்க என நான் நர்சரி ஸ்கூல் படிக்கும்போது டீச்சர் கேட்டார். அப்போது எல்லாரும் பல விஷயங்கள் சொன்னார்கள். நான் மட்டும் த்ரிஷா ஆக போகிறேன் என கூறினேன்” என கூறினார். ‘உங்களுக்கு போட்டி வந்துடுச்சுனு நான் திரிஷாவை நேரில் பார்க்கும்போதே சொல்கிறேன்’ என கமல் அதற்கு கூறி இருக்கிறார்.
#JANANY #BiggBossTamil6 #GrandLaunch - இப்போது ஒளிபரப்பாகிறது நம்ம Disney+ Hotstar இல் .. @ikamalhaasan pic.twitter.com/zdAqvVbPWO
— Disney+ Hotstar Tamil (@disneyplusHSTam) October 9, 2022