Viral Video: அன்றே கணித்த பயில்வான்.. 6 மாசம் முன்னாடியே நயன் - வாடகைத்தாய் விவகாரத்தை அப்டியே சொன்ன பயில்வான்.. !

bayilvan ranganathan says about nayanthara surrogacy plan before 6 months itself

கேரளா மாநிலத்தை சேர்ந்த நயன்தாரா, 2004ம் ஆண்டு ஹரி இயக்கத்தில் வெளியான ஐயா படம் மூலம் தமிழ் திரையுலகில் ஹீரோயினாக அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து, அடுத்தப்படமே சூப்பர்ஸ்டார் ஜோடியாக சந்திரமுகி படத்தில் நடித்தார். இப்படத்தில் ஹோம்லியான லுக்கில் சில கதாபாத்திரங்களில் நடித்திருந்தார்.

bayilvan ranganathan says about nayanthara surrogacy plan before 6 months itself

கஜினி, சிவகாசி, வல்லவன் போன்ற போன்ற படங்களில் சூர்யா, விஜய், சிம்பு போன்ற தமிழ் டாப் நடிகர்களுடன் நடித்தார். கடந்த சுமார் 20 ஆண்டுகளில், தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற அனைத்து தென்னிந்திய மொழி படங்களில் நடித்து தென்னிந்திய திரையுலகின் லேடி சூப்பர்ஸ்டாராக வலம் வருகிறார்.

bayilvan ranganathan says about nayanthara surrogacy plan before 6 months itself

கோலமாவு கோகிலா, டோரா, கொலையுதிர் காலம் போன்ற படங்களில் நடித்து தனக்கென இடத்தை பிடித்தார். இதன் நடுவே, நானும் ரவுடி தான் படத்தில் நடித்ததன் மூலம் அப்படத்தின் இயக்குனர் ஆன, விக்னேஷ் சிவன் உடன் காதல் ஏற்பட்டு 7 ஆண்டுகளுக்கு மேலாக காதலித்து வந்தனர்.

bayilvan ranganathan says about nayanthara surrogacy plan before 6 months itself

மகாபலிபுரத்தில் கடந்த ஜுன் 9ம் தேதி நயன்தாரா - விக்னேஷ் சிவன் திருமணம் நடைபெற்றது. இவர்களின் திருமண புகைப்படங்கள் இணையத்தில் செம ட்ரெண்ட் ஆகி வந்தது. திருமணம் முடிந்த கையோடு கோவில், கேரளா, தேனிலவு சென்றது என அனைத்து புகைப்படங்களும் இணையத்தில் வைரல் ஆனது.

bayilvan ranganathan says about nayanthara surrogacy plan before 6 months itself

இந்நிலையில், அக்டோபர் 9ம் தேதி, திடீரென விக்னேஷ் சிவன் தனது அதிகாரப்பூர்வ சமூகவலைத்தள பக்கத்தில், நயனும் நானும் அப்பா அம்மா ஆகிவிட்டோம். எங்களுக்கு இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளது என போட்டோவுடன் அறிவித்தார். இது சமூக வலைத்தளங்களில் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது.

bayilvan ranganathan says about nayanthara surrogacy plan before 6 months itself

கர்ப்பமாக நயன்தாரா இல்லை, திருமணம் முடிந்து 4 மாதங்களே ஆகியுள்ளது, அப்புறம் எப்படி என ரசிகர்கள் முதல் அனைவரும் குழம்பியுள்ள நிலையில், வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகிறது. இது தான் தற்போது சர்ச்சைக்கு காரணம் ஆகி இருக்கிறது.

bayilvan ranganathan says about nayanthara surrogacy plan before 6 months itself

இந்த முறை தடை செய்யப்பட்ட ஒன்று, திருமணமாகி 5 வருடங்களுக்கு பிறகு தான் வாடகை தாய் மூலம் குழந்தை பெற அனுமதி, குழந்தை பெற முடியாத நிலை medically இருந்தால் மட்டுமே இதை செய்ய முடியும்.. என்றெல்லாம் தற்போது பல சர்ச்சைகள் வெடித்து இருக்கிறது.

bayilvan ranganathan says about nayanthara surrogacy plan before 6 months itself

நயன்தாரா இதன் மூலம் பெரிய சர்ச்சையை வரும் நாட்களில் சந்திக்க போகிறார் என்பது உறுதியாக தெரிகிறது. அவர் தனது தரப்பு விளக்கத்தை கொடுத்தால் மட்டுமே இந்த சர்ச்சைகள் முடிவுக்கு வரும்.

bayilvan ranganathan says about nayanthara surrogacy plan before 6 months itself

இந்நிலையில், சர்ச்சை நாயகன் பயில்வான் ரங்கநாதன், இந்த வாடகை தாய் விவகாரம் குறித்து சில மாதங்கள் முன்பே அவர் பேட்டியில் பேசியுள்ள வீடியோ ஒன்று செம வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் சிறு சிறு முக்கிய கதாபாத்திரங்களிலும், பிரபல காமெடி நடிகராகவும் நடித்து பிரபலம் ஆனவர் நடிகர் பயில்வான் ரங்கநாதன். ரஜினி, கமல் உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்துள்ள இவர் தற்போது தனி யூடியூப் சேனலை தொடங்கி சினிமா வட்டாரத்தில் நடக்கும் பல விஷயங்கள் குறித்து பேசி ட்ரெண்டிங் ஆகி வருகிறார்.

bayilvan ranganathan says about nayanthara surrogacy plan before 6 months itself

சினிமா துறையில் நடக்கும் விஷயங்களோடு விட்டு வைக்காமல், நடிகர், நடிகைகளின் தனிப்பட்ட வாழ்க்கையை குறித்து பகிர்ந்து வருகிறார். நடிகர்-நடிகைகள் பலரும் இவரின் பேச்சு எல்லையை மீறி போவதாக கூறி புகார் கூறி வருகின்றனர். நடிகைகளின் அந்தரங்க வாழ்க்கையை பற்றி மிகவும் கொச்சையாக பேசி வருவதை ரசிகர்கள் பலரும் கமெண்ட் பகுதியில் வசைபாடி வருகின்றனர்.

bayilvan ranganathan says about nayanthara surrogacy plan before 6 months itself

சில மாதங்களுக்கு முன்பே பயில்வான் ரங்கநாதன் அளித்த ஒரு பேட்டியில், திருமணமாகி நயன்தாரா குழந்தை பெற்றுக்கொள்ள ஆசைப்படுவதாகவும் அதைவிட சினிமாவில் ஆர்வம் கொண்டிருந்ததாலும் குழந்தை பெறாமல் வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொள்ள முடிவெடுத்திருக்கிறார்கள் என்று கூறியிருந்தார் பயில்வான்.

bayilvan ranganathan says about nayanthara surrogacy plan before 6 months itself

சினிமா வாய்ப்பு நன்றாக வரும் சமயத்தில் 10 மாதம் கர்ப்பம், குழந்தை என ரெஸ்ட் எடுத்தால், அந்நேரம் வேறு யாராவது நடிகை தனது நம்பர் 1 இடத்தை பிடிக்க வாய்ப்புள்ளதாக பயந்தும் இப்படி ஒரு முடிவை எடுத்துள்ளதாக அவர் தெரிவித்திருந்தார். மேலும் சமீபத்தில் மருத்துவர்களின் கட்டுப்பாட்டில் நயன்தாரா இருப்பதாகவும் தெரிவித்திருந்தார். அந்த வீடியோவை ரசிகர்கள் ஷேர் செய்து அன்றே கணித்தார் பயில்வான் என கமெண்ட் செய்து வருகின்றனர்.

Share this post