விதிகளை மீறி குழந்தை பெற்றதாக புகார்.. நயன்தாரா மீது விரைவில் விசாரணை.. மருத்துவத்துறை அமைச்சர் பேட்டி
கேரளா மாநிலத்தை சேர்ந்த நயன்தாரா, 2004ம் ஆண்டு ஹரி இயக்கத்தில் வெளியான ஐயா படம் மூலம் தமிழ் திரையுலகில் ஹீரோயினாக அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து, அடுத்தப்படமே சூப்பர்ஸ்டார் ஜோடியாக சந்திரமுகி படத்தில் நடித்தார். இப்படத்தில் ஹோம்லியான லுக்கில் சில கதாபாத்திரங்களில் நடித்திருந்தார்.
கஜினி, சிவகாசி, வல்லவன் போன்ற போன்ற படங்களில் சூர்யா, விஜய், சிம்பு போன்ற தமிழ் டாப் நடிகர்களுடன் நடித்தார். கடந்த சுமார் 20 ஆண்டுகளில், தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற அனைத்து தென்னிந்திய மொழி படங்களில் நடித்து தென்னிந்திய திரையுலகின் லேடி சூப்பர்ஸ்டாராக வலம் வருகிறார்.
கோலமாவு கோகிலா, டோரா, கொலையுதிர் காலம் போன்ற படங்களில் நடித்து தனக்கென இடத்தை பிடித்தார். இதன் நடுவே, நானும் ரவுடி தான் படத்தில் நடித்ததன் மூலம் அப்படத்தின் இயக்குனர் ஆன, விக்னேஷ் சிவன் உடன் காதல் ஏற்பட்டு 7 ஆண்டுகளுக்கு மேலாக காதலித்து வந்தனர்.
மகாபலிபுரத்தில் கடந்த ஜுன் 9ம் தேதி நயன்தாரா - விக்னேஷ் சிவன் திருமணம் நடைபெற்றது. இவர்களின் திருமண புகைப்படங்கள் இணையத்தில் செம ட்ரெண்ட் ஆகி வந்தது. திருமணம் முடிந்த கையோடு கோவில், கேரளா, தேனிலவு சென்றது என அனைத்து புகைப்படங்களும் இணையத்தில் வைரல் ஆனது.
இந்நிலையில், அக்டோபர் 9ம் தேதி, திடீரென விக்னேஷ் சிவன் தனது அதிகாரப்பூர்வ சமூகவலைத்தள பக்கத்தில், நயனும் நானும் அப்பா அம்மா ஆகிவிட்டோம். எங்களுக்கு இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளது என போட்டோவுடன் அறிவித்தார். இது சமூக வலைத்தளங்களில் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது.
கர்ப்பமாக நயன்தாரா இல்லை, திருமணம் முடிந்து 4 மாதங்களே ஆகியுள்ளது, அப்புறம் எப்படி என ரசிகர்கள் முதல் அனைவரும் குழம்பியுள்ள நிலையில், வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகிறது. இது தான் தற்போது சர்ச்சைக்கு காரணம் ஆகி இருக்கிறது.
இந்த முறை தடை செய்யப்பட்ட ஒன்று, திருமணமாகி 5 வருடங்களுக்கு பிறகு தான் வாடகை தாய் மூலம் குழந்தை பெற அனுமதி, குழந்தை பெற முடியாத நிலை medically இருந்தால் மட்டுமே இதை செய்ய முடியும்.. என்றெல்லாம் தற்போது பல சர்ச்சைகள் வெடித்து இருக்கிறது.
நயன்தாரா இதன் மூலம் பெரிய சர்ச்சையை வரும் நாட்களில் சந்திக்க போகிறார் என்பது உறுதியாக தெரிகிறது. அவர் தனது தரப்பு விளக்கத்தை கொடுத்தால் மட்டுமே இந்த சர்ச்சைகள் முடிவுக்கு வரும்.
இந்நிலையில், சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியனிடம் இதுகுறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதிலளித்த அவர், “21 வயது முதல் 36 வயதுடையவர்களே சினைமுட்டை தானம் செய்யவேண்டும். திருமணம் ஆகி, கணவரின் ஒப்புதலுடன் இதைச் செய்ய வேண்டும். நடிகை நயன்தாரா விதிமுறையை பின்பற்றி வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றாரா என மருத்துவக்கல்லூரி இயக்குநரகம் மூலம் அவரிடம் விளக்கம் கேட்கப்படும்” என தெரிவித்துள்ளார். இதன்மூலம் நயன்தாராவிடம் விரைவில் விசாரணை நடத்தவும் வாய்ப்புள்ளதாக தெரிகிறது.