அவங்களத்தான் காதலிக்கிறேன் – வெளியேறிய நிலையில் ஷாக் கொடுத்த பிரதீப்..!
பிக்பாஸ் சீசன் 7ல் தனது நடத்தையின் மூலம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வந்தார் பிரதீப் ஆண்டனி. பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என கூறி போட்டியில் இருந்து வெளியேற்றப்பட்டார்.
ரெட் கார்டு கொடுத்து வெளியே அனுப்பப்பட்ட நிலையில், அந்த கார்டை வைத்துக்கொண்டு தன் குடும்பத்தினருடன் சேர்ந்து ஜாலியாக நின்று போஸ் கொடுத்து அந்த புகைப்படத்தை சமூக வலைதளங்களில் பதிவிட்டார். அந்த புகைப்படம் வைரலானது.
இந்நிலையில், ஒரு பெண்ணை காதலிப்பதாக பிரதீப் கூறியிருக்கிறார். ஏற்கனவே ஏழு வருடமாக அந்த பெண்ணை காதலித்து பிரேக் அப் ஆகிவிட்டதாம். இன்னொரு பெண்ணை நாலு வருடமாக காதலித்தாராம்.
அதுவும் பிரேக்கப் ஆகிவிட்டதாம். இப்போது வேறு ஒரு பெண்ணை காதலிப்பதாகவும், அந்த பெண் மிகவும் பொறுமைசாலி இது எங்கு வரை போகிறது என்று பார்ப்போம் என்று தெரிவித்திருக்கிறார்.
Share this post