விஜய் அதை பண்ணுவாருன்னு நினைச்சு கூட பாக்கல.. ஜனனி ஓபன் டாக்..!

/bigg-boss-janani-speak-about-vijay-

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் நடிகர் விஜய். தற்போது விஜய், த்ரிஷா நடித்துள்ள லியோ வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இப்படத்தில் முதல் முறையாக லிப் லாக் காட்சியும் இடம்பெற்றுள்ளது. ஒரு வருடம் கழித்து விஜய் அரசியலுக்கு வருவார் என்று கூறப்படுகிறது.

/bigg-boss-janani-speak-about-vijay-

முன்னதாக, பெரிதும் எதிர்பார்ப்பில் வெளிவந்த லியோ படம் இதுவரை உலகளவில் ரூ. 553 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது. இந்த நிலையில், படத்தில் பிக் பாஸ் ஜனனியும் நடித்துள்ளார். இந்நிலையில் பேட்டி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய ஜனனி, லியோ படத்தில் ஷூட்டிங் அனுபவங்களை குறித்து பேசியுள்ளார்.

/bigg-boss-janani-speak-about-vijay-

ஷூட்டிங் சமயத்தில் விஜய் சார் இன்ஸ்டாகிராம் ஓபன் செய்தார். அப்போது அவரிடம் என்ன சார் கொஞ்ச நேரத்துல இவ்வளவு பாலோவர்ஸ் வந்துட்டாங்க என்று கேட்டேன். அவர் நீங்க இன்ஸ்டாவில் இருக்கீங்களா என்று கேட்டு என்னுடைய ஐடியை பார்த்தார். அப்போது, சிம்பு பாடிய பாடல் ஒன்றை பாடி வீடியோ ஒன்றை பதிவிட்டு இருந்தேன். அதை பார்த்ததும் பயங்கரமாக சிரித்து விட்டார். அவர் அப்படி சிரித்து நான் பார்த்ததில்லை அது மட்டும் அல்லாமல் விஜய் சார் என்னுடைய ஐடி சென்று அந்த வீடியோவை பார்ப்பார் என நான் எதிர்பார்க்கவில்லை என்று ஜனனி தெரிவித்திருக்கிறார்.

Share this post